இவர் ஒரு மிகச்சிறந்த ஆல்ரவுண்டர். ஆனா இவரை எல்லோரும் சாதாரணமா ட்ரீட் பண்றீங்க – சச்சின் வருத்தம்

sachin
- Advertisement -

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக எந்த ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறாமல் இருந்தது. அதற்கு முடிவு கட்டும் விதமாக கடந்த எட்டாம் தேதி தான் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது சவுத்தாம்ப்டன் நகரில் தொடங்கி நடந்து வருகிறது.

wivseng

- Advertisement -

இந்நிலையில் இந்த ஓய்வு நேரத்தை பயன்படுத்திய இந்திய வீரர்கள் மட்டுமின்றி உலக அளவில் இருக்கும் வீரர்களும் கிரிக்கெட் குறித்த தங்களது அனுபவங்களையும், வீரர்கள் குறித்த தங்களது தனிப்பட்ட கருத்துக்களையும் சமூக வலைதளம் மூலம் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும், வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாராவும் நேரலையில் சில தகவல்களை பரிமாறிக் கொண்டனர்.

அந்த வகையில் தற்போது இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் குறித்து பேசிய சச்சின் டெண்டுல்கர் கூறுகையில் : வெஸ்ட் இண்டீஸ் அணியின் மிகச்சிறந்த ஆல்-ரவுண்டராக நான் ஜேசன் ஹோல்டரை பார்க்கிறேன். அவரது தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பாக விளையாடும்.

Holder

மேலும் பல பாஸ்ட் பவுலர்கள் அந்த அணியில் இருந்தாலும் அதே நேரத்தில் ஹோல்டர் சிறப்பாக பந்து வீசி வருகிறார். அவரது பந்து வீச்சில் விக்கெட் விக்கெட்டுகள் நிச்சயம் விழும் பந்துவீச்சு மட்டுமல்லாது பேட்டிங்கிலும் சிறப்பாக ஆடுகிறார். அணிக்கு தேவையான நேரத்தில் 50 முதல் 55 வரை வேண்டுமானாலும் அடிக்கக் கூடிய திறன் படைத்தவர்.

- Advertisement -

மேலும் தொடர்ச்சியாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பேட்டிங் மற்றும் பவுலிங் செய்து வரும் இவர் ஆல்-ரவுண்டராக தரத்தில் குறைத்தும் மதிப்பிடுகிறார். ஆனால் இவர் ஒரு சிறப்பான ஆல்ரவுண்டர் என்றும் அவர் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் என்றும் சச்சின் புகழாரம் சூட்டினார்.

WI

ஜேசன் ஹோல்டர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1898 ரன்களையும், 106 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் 114 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1810 ரன்களும், 134 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement