அக்தரை பார்த்து நான் பயந்தது இல்லை. நான் பயந்த ஒரே பவுலர் இவர்தான் – சச்சின் ஓபன் டாக்

Sachin
- Advertisement -

சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்காக 24 வருடங்கள் விளையாடியுள்ளார். அவர் பார்க்காத ஜாம்பவான் பந்துவீச்சாளர்களே இல்லை எனலாம். கபில்தேவ் காலத்து பந்துவீச்சாளர்கள் இருந்து வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் வரை பார்த்து அடித்து துவம்சம் செய்துள்ளார். சமீபத்தில் கூட டேல் ஸ்டெய்ன், ஜேம்ஸ் ஆண்டர்சன் போன்ற இளம் பந்துவீச்சாளர்களை அடித்து நொறுக்கிய்வர் அவர்.

Sachin 1

இந்நிலையில் அவர் ஒரு பந்து வீச்சாளரை பற்றி புகழ்ந்து பேசியுள்ளார். 2003 ஆம் ஆண்டு இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இடம் பிடித்தவர் தான் ஜேம்ஸ் ஆண்டர்சன். அந்த அணிக்காக தற்போது வரை 17 வருடங்களாக விளையாடி வருகிறார். 152 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார் 584 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இது குறித்து சச்சின் டெண்டுல்கர் கூறுகையில்…

- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக முதன்முதலாக விளையாடிய போது பெரிதாக சிரம படவில்லை. ஆனால் ஜேம்ஸ் ஆண்டர்சன் எனக்கு பந்து வீசிய போது சற்று தடுமாறினேன் . அவர் வீசிய ரெவர்சிங் பந்துகள் மிகவும் அபாயகரமானதாக இருந்தது. அப்படி ஒரு பந்தை நான் அதுவரை பார்த்ததில்லை .நான் சற்று திணறினேன் .

மற்ற வீரர்களை பார்க்கும்போது அவர்கள் பந்து வைக்கும் விதத்தை வைத்தே கண்டுபிடித்து விடலாம். ஆனால் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்து வீசினால் அவ்வாறு கண்டுபிடிப்பது மிகவும் கடினம். ஒவ்வொரு பந்திற்கும் தனது கைவிரல்களை எப்படி பிடிக்கிறார் என்பதை மாற்றிக்கொண்டே இருப்பார்.

- Advertisement -

அவர் பந்தை வீசும் விதமும் பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் .அவர் சிறப்பான பந்து வீச்சாளராக இருந்து வருகிறார் என்று கூறியுள்ளார் சச்சின் டெண்டுல்கர். ஏற்கனவே பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான அப்ரிடி கூறுகையில் சச்சின் அக்தரை எதிர்கொள்ள சிரமப்பட்டார் என்று குறிப்பிட்டு இருந்தார்.

sachin

இந்நிலையில் அதற்கு முடிவு கட்டும் வகையில் சச்சின் இப்போது பதிலளித்துள்ளார். ஆண்டர்சனை எதிர்கொள்ள சிரமப்பட்டுள்ளதாக சச்சினே கூறிவிட்டார்.

Advertisement