உ.கோ தொடர் நாயகன் விருதினை வில்லியம்சன் பெற்றபோது நான் அவரிடம் கூறியது இதுதான் – மனம் திறந்த சச்சின்

Sachin
- Advertisement -

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த தொடரில் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து தோல்வி அடைந்தது. அதன்பிறகு நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் உலகக்கோப்பை 2019 தொடர் நாயகன் விருது நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பெற்றார்.

sachin 1

- Advertisement -

அவருக்கு தொடர் நாயகன் விருதினை இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வழங்கினார். இந்த உலக கோப்பை தொடரில் வில்லியம்சன் நியூசிலாந்து அணிக்காக 578 ரன்களை குவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கேப்டனாக ஒரு உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்(578) என்ற சாதனையையும் வில்லியம்சன் புரிந்தார்.

பரிசளிப்பு விழாவில் தொடர் நாயகன் விருது வில்லியம்சனிடம் தந்த சச்சின் அவரிடம் பேசிய விடயம் குறித்து பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதன்படி சச்சின் கூறியதாவது : நான் வில்லியம்சன்க்கு தொடர் நாயகன் விருதை கொடுத்து விட்டு அவரிடம் நீங்கள் எப்பொழுதும் அமைதியாக இருக்கும் பழக்கத்தை வைத்துள்ளீர்கள். அதனால் உங்களுடைய ஆட்டம் எந்த இடத்திலும் நிலை தடுமாறாமலும், கவனம் சிதறாமலும் இருக்கிறது.

sachin 2

இந்த உலக கோப்பை தொடரை நீங்கள் இழந்ததில் எனக்கு சிறிதளவு வருத்தம் இருக்கிறது. ஆனால் நீங்கள் அதனை உங்கள் முகத்தில் சற்று கூட வெளிப்படுத்தவில்லை இது ஒரு நல்ல குணம் என்று நான் அவரிடம் கூறினேன். மேலும் ஆட்டத்தை எப்போதும் வேறு கண்ணோட்டத்தில் பார்க்கிறீர்கள் உங்களுடைய பீல்டிங் பிளான் மற்றும் பவுலிங் சேஞ்ச் போன்றவை சிறப்பாக உள்ளது.

newzeland

எப்பொழுதும் பதட்டம் அடையாமல் கடைசி வரை போராடும் உங்கள் குணம் எனக்கு பிடித்திருக்கிறது என்று வில்லியம்ஸ் தன்னிடம் கூறியதாக சச்சின் மனம் திறந்த பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

Advertisement