கொரோனா விதிமுறையை மறந்து கோலி செய்த செயல் – கிண்டல் செய்த சச்சின்

Saliva
- Advertisement -

கொரோனோ ஏற்படுத்திய பெரும் பாதிப்பிற்கு பிறகு மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு இடையே உயிர் பாதுகாப்பு வளையத்தை அமைத்து தற்போது ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் ஆரம்பத்தில் இருந்து பாதுகாப்பான பல்வேறு பலகட்ட எச்சரிக்கை நடவடிக்கைகளை பின்தொடர்ந்து இந்த தொடர் நடைபெற்று வருகிறது. மேலும் தற்போது இத்தொடர் இரு வாரத்தை வெற்றிகரமாக கடடைந்துள்ளது.

Dubai

- Advertisement -

மேலும் இத்தொடரில் பங்கேற்றுள்ள வீரர்கள், அம்பயர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவருக்கும் தனித்தனியே கட்டுப்பாட்டு விதிமுறைகள் நடைமுறைப் படுத்தப்பட்டு அவற்றின் படியே தற்போது ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக கொரோனவைரஸ் எச்சில் மூலம் அதிகமாக பரவும் என்ற காரணத்தினால் இம்முறை பந்தில் இச்சிலை பயன்படுத்த கூடாது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆன ஐசிசி தடை விதித்துள்ளது.

ஆனாலும் வீரர்கள் பழக்க தோஷத்தில் பந்தில் எச்சில் தடவி விடுகின்றனர். அந்தவகையில் நேற்று நடைபெற்ற டெல்லி மற்றும் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மூன்றாவது ஓவரில் போது ப்ரித்வி ஷா அடித்த ஷாட்டை கவர் திசையில் பிடித்த விராட் கோலி பந்தை சிறப்பாக பீல்டிங் செய்தது மட்டுமின்றி தனக்கே உரித்தான பாணியில் எச்சிலை தொட்டு பந்தை பளபளப்பாக்க முயன்றார்.

dc

ஆனால் கொரோனா விதிமுறை அவருக்கு ஞாபகம் வர கடைசி நேரத்தில் அதை செய்யாமல் தவிர்த்து சக வீரர்களை பார்த்து நான் எச்சில் தடவ வில்லை என்று கூறியவாறு சிரித்தபடி கடந்து சென்றார். கோலியின் இந்த செயலுக்கு ட்விட்டரில் பக்கத்தில் சச்சின் குறிப்பிட்டதாவது : ப்ரித்வி ஷா அருமையான ஷாட்டை ஆடியிருந்தார்.

கிட்டத்தட்ட பந்தில் எச்சிலை தடவை சென்ற கோலி மில்லியன் டாலர் ரியாக்சனை கொடுத்தார். சில நேரங்களில் நம் உள்உணர்வுகளுக்கு நாம் ஆட்பட்டு விடுகிறோம் என்று கிண்டல் செய்துள்ளார். ஒரே போட்டியில் 3 முறை எச்சிலை தெரியாமல் தடவினால் எதிரணிக்கு 5 ரன்கள் பெனால்டி கொடுக்கப்படும். அதுமட்டுமின்றி மூன்று முறைக்கு மேல் செய்தால் குறிப்பிட்ட வீரரை சஸ்பெண்ட் செய்யவும் வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது

Advertisement