இவரின் திறமையை நாம் குறைச்சி மதிப்பிட்டுட்டோம். அவர் டெஸ்ட் பிளேயர் மட்டுமல்ல – சச்சின் புகழாரம்

sachin1
- Advertisement -

விருத்திமான் சஹா இந்தியாவின் மிகச் சிறந்த விக்கெட் கீப்பர் என்று பாராட்டப்படுபவர் தோனி அவருக்கு பின்னர் இவர் தான் இந்திய அணியின் டெஸ்ட் விக்கெட் கீப்பர் என்று அங்கீகரிக்கப்பட்ட தற்போது டெஸ்ட் அணியில் மட்டும் ஆடிக் கொண்டிருக்கிறார் அந்த இடமும் இவருக்கு நிரந்தரமில்லை. மேலும் ஒருநாள் மட்டும் டி20 ஆகிய அணிகளில் அவருக்கு இடமில்லாமல் இருந்து வருகிறது.

- Advertisement -

ரிஷப் பந்த், கே எல் ராகுல் போன்ற விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் அவரது இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர். மூன்று விதமான போட்டிகளுக்கும் இவர்தான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்று பாராட்டப்பட்ட ரிஷப் பந்த் இந்த வருட ஐபிஎல் தொடரில் பெரிதாக தனது ஆட்டத்தை காட்டவில்லை.

ஆனால் விருத்திமான் சஹா டெல்லி அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் அதிரடியாக விளையாடி 45 பந்துகளில் 87 ரன் குவித்தார். இந்த ஆட்டம் அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தது மேலும் கிரிக்கெட் ஜாம்பவான் மற்றும் கிரிக்கெட்டின் கடவுள் என்று பாராட்டப்படும் சச்சின் டெண்டுல்கர் இவரது ஆட்டத்தை பாராட்டி புகழ்ந்திருக்கிறார்.

Saha 2

அதாவது விருத்திமான் சஹா ஆட்டம் என்னை ஆச்சரியப்பட வைத்துவிட்டது. பந்து எங்கே எப்போது திரும்பும் எந்த ஷாட் ஆட வேண்டும் என்பதையெல்லாம் அவர் கணித்து வைத்திருந்தார். அவரது கணிப்பு என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. எப்போதும் நாம் ஏன் அவரது பேட்டிங் திறமையை குறைத்து மதிப்பிடுகிறோம். இவர் ஒரு மிகச் சிறந்த பேட்ஸ்மேன் என்று வாய் நிறைய பாராட்டியுள்ளார் சச்சின் டெண்டுல்கர் அதேநேரத்தில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி…

Saha 1

உலகின் மிகச் சிறந்த விக்கெட் கீப்பர் இன் தனித்துவமான ஆட்டத்தை பார்த்தேன். அவரது ஆட்டம் பிரமிக்க வைத்துவிட்டது என்று ட்வீட் செய்திருந்தார். 2014 ஆம் ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஆடிய விருத்திமான் சகா இறுதிப் போட்டியில் அதிரடியாக சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement