இனிவரும் காலத்தில் இவர் நிச்சயம் உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டராக திகழ்வார் – சச்சின் புகழாரம்

Sachin
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததை அடுத்து இந்திய அணியின் மீதும், இந்திய அணியின் வீரர்கள் மீதும் கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அதுமட்டுமின்றி விராத் கோலியையும் கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்து வருகிறது.

kohli 2

- Advertisement -

இந்நிலையில் இந்த இறுதிப் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் கைல் ஜேமிசன் இருந்துள்ளார். இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்திய அணியின் கேப்டன் விராத் கோஹ்லியை ஆட்டமிழக்க செய்த அவர் 7 விக்கெட்டுகளை கைப்பற்றியது மட்டுமின்றி பேட்டிங்கிலும் அதிரடி காட்டினார்.

இந்நிலையில் அவரை பாராட்டி பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் கூறுகையில் : கைல் ஜேமிசன் இன்று இறுதி போட்டியில் மிகச் சிறப்பாக பந்துவீசினார். மேலும் பேட்டிங்கிலும் அவ்வப்போது அதிரடி காட்டுகிறார் என்னை பொறுத்தவரை எதிர்காலத்தில் உலக உலகத்தின் தலைசிறந்த ஆல்-ரவுண்டராக கைல் ஜேமிசன் மாறுவார் என நான் நம்புகிறேன்.

Jamieson

கடந்த ஆண்டு நியூசிலாந்தில் அவர் விளையாடியதை நான் பார்த்தேன். அப்போதிலிருந்து அவர் அற்புதமாக விளையாடி வருகிறார், அவருடைய ஆட்டம் என்னை கவரும் வகையில் உள்ளது. அந்த அளவிற்கு அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் என்று சச்சின் டெண்டுல்கர் புகழ்ந்து கூறியுள்ளார். மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில் : நியூசிலாந்து அணியில் பல்வேறு வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். ஆனால் அவர்களைவிட ஜேமிசன் முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறார்.

Jamieson 2

அவரது உயரம் மற்றும் பலம் ஆகியவை அவரது பந்து வீச்சில் நன்றாக உதவுகிறது. அவருக்கு நிச்சயம் நல்ல எதிர்காலம் உள்ளது எனவும் சச்சின் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அவர் ஆட்டநாயகன் விருதையும் பெற்று அசத்தி இருந்தார். இதுவரை 8 டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ள அவர் 46 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement