இவர் வெறும் அதிரடி ஆட்டக்காரர் மட்டுமல்ல. நல்ல புத்திசாலியான பேட்ஸ்மேன் – சீனியர் வீரரை புகழ்ந்த சச்சின்

sachin1
- Advertisement -

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கடைசி கட்டத்தில் பிளே ஆப் சுற்றுக்கு தயாராகிவிட்டது. நாங்களும் ப்ளே ஆப் போட்டிக்கு வருகிறோம் என்று கடைசி கட்டத்தில் போட்டிகளை வென்று புள்ளிகளை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை 10 போட்டிகளில் ஆடியுள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 10 புள்ளிகள் எடுத்து இருக்கிறது இதில் முதல் 7 போட்டிகளில் கெயில் ஆடவில்லை எட்டாவது போட்டியில் இருந்து கெயில் ஆடிவருகிறார்.

kxip

அவர் விளையாடி வருவதில் இருந்து தொடர்ச்சியாக பஞ்சாப் அணி வெற்றிபெற்று கொண்டிருக்கிறது கிறிஸ் கெயில் ஆடிய மூன்று போட்டிகளில் தற்போது வரை 106 ரன்கள் எடுத்து இருக்கிறார். ஐபிஎல் தொடர்களில் 128 போட்டிகளில் 4590 ரன்களை குவித்து பல சாதனைகள் படைத்து இருக்கிறார் .ஒரு போட்டியில் அதிகபட்சமாக 175 ரன்கள், அதிகபட்சமாக 335 சிக்சர்களை அடித்து பல சாதனைகள் படைத்து இருக்கிறார்.

- Advertisement -

கிறிஸ் கெய்ல் பெரும்பாலும் அதிரடி ஆட்டத்திற்கு சொந்தக்காரர் என்று மக்கள் நினைத்து வருகின்றனர். ஆனால் பல நேரங்களில் அவர் சாமர்த்தியமாகவும் புத்திக்கூர்மையுடன் தனது ஆட்டத்தை ஆடி தான் இவ்வளவு சாதனைகளை படைத்து இருக்கிறார் என்று சச்சின் டெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : அதிரடியாக ஆடும் பேட்ஸ்மேன் என்றுதான் நாம் கிறிஸ் கெயில் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

Gayle

அவர் அடித்து அதிரடியாக ஆடக்கூடிய வீரர் மட்டுமல்ல, புத்தியை சரியாக பயன்படுத்தி ஸ்மார்ட்டாக ஆடக்கூடிய பேட்ஸ்மேன். அனைத்து பந்துவீச்சாளர்களை அடிக்க வேண்டுமென்று அவர் எண்ணவே மாட்டார். நல்ல பந்துவீச்சாளர்கள் வந்தாள் சிங்கிள் அடித்துவிட்டு பலவீனமான பந்துவீச்சாளர் பிடித்து அடித்து நொறுக்கி விடுவார்.

Gayle

ஒன்று அல்லது இரண்டு பந்துவீச்சாளர்களை மட்டும் டார்கெட் செய்து அடிப்பார் டெல்லி அணிக்கு எதிராக இளம் வீரர் துஷார் தேஷ்பாண்டே அடித்து 26 ரன்கள் எடுத்தார். ஒவ்வொரு பந்தையும் அடித்து ஆட வேண்டும் என்றும் நினைக்க மாட்டார். ஆடுகளத்தின் தன்மை பந்து வீச்சாளர்களின் பலம், பலவீனம் பந்து எப்படி குதிக்கிறது, என்பதையெல்லாம் ஆராய்ந்து விட்டு தான் தெளிவாக ஆடுவார் என்று தெரிவித்திருக்கிறார் சச்சின் டெண்டுல்கர்.

Advertisement