எப்படி போட்டா தோனி அவுட் ஆவார்னு தெரிஞ்சி பிளான் பண்ணி போட்டு இருக்காரு – சுழற்பந்து வீச்சாளரை புகழ்ந்த சச்சின்

Dhoni

இந்த வருட ஐபிஎல் தொடர் ஆரம்பித்ததிலிருந்தே சென்னை அணிக்கு சற்று மோசமான வருடமாக அமைந்து வருகிறது. ஏனெனில் முதல் போட்டியில் வெற்றியுடன் தொடங்கிய சென்னை அணிஅடுத்த மூன்று தோல்விகளைச் சந்தித்தது அதன் பின்னர் ஒரு வெற்றி பெற்று மீண்டும் இரண்டு போட்டிகளை தற்போது இழந்துள்ளது. இதனால் இந்த வருட பிளே-ஆப் சுற்றுக்கு சென்னை அணி தகுதி பெறுமா ? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

CSK-1

இவை அனைத்திற்கும் முக்கிய காரணமாக சென்னை அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் பார்க்கப்படுகிறது. சென்னை அணியின் மிடில் ஆர்டரில் பெரிய அளவில் யாரும் சரியாக விளையாடவில்லை. அதிலும் குறிப்பாக ஜாதவின் ஆட்டம் விமர்சனத்துக்கு உள்ளாகி அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.

ஆனால் அவருக்கு இணையாக தோனியும் தற்போது சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் என்று என்று கூறலாம். ஏனெனில் களமிறங்கிய அனைத்து போட்டிகளிலும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறி வருகிறார். அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மோதிய ஆட்டத்தில் முக்கியமான நேரத்தில் ஒரு சிக்சரை அடித்துவிட்டு அடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.

Chahal 1

இந்நிலையில் அந்த போட்டியில் தோனியை சாமர்த்தியமாக தனது திட்டத்தை வைத்து சாஹல் ஆட்டமிழக்க வைத்து வெளியேற்றியதாக சச்சின் டெண்டுல்கர் புகழ்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : 16-வது ஓவரில் மூன்றாவது பந்தை தோனி சிக்ஸ் அடித்து விரட்டினார். ஆனால் அடுத்த இரண்டு பந்தினை லெக் சைடில் வீசினார். அதனால் கடைசி பந்தினை லெக் சைடில் தான் வீசுவார் என்று தோனி எதிர்பார்த்து இருப்பார்.

- Advertisement -

ஆனால் அவர் ஆப் ஸ்டும்ப் வைட் திசையில் சாஹல் பந்தினை வீசினார். அதனால் தோனி நம்ப முடியாத வகையில் பெரிய ஷாட் ஆடி அவுட் ஆனார். என்னைப் பொறுத்தவரை சாஹல் தோனியுடன் செஸ் விளையாடுவது போல் விளையாடி அவரது விக்கெட்டை வீழ்த்தினார் என்று சச்சின் டெண்டுல்கர் புகழ்ந்துள்ளார்.