நான் பார்த்ததில் சிறந்த டாப் 5 பெஸ்ட் ஆல்ரவுண்டர் இவர்கள்தான் – பட்டியலிட்ட சச்சின்

sachin
- Advertisement -

கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்களை தவிர ஆல் ரவுண்டர்களுக்கு மிகப் பெரும் பங்கு உள்ளது. கிரிக்கெட் வரலாற்றில் பல சிறந்த ஆல்ரவுண்டர்கள் உருவாகி உள்ளனர். இந்நிலையில் கிரிக்கெட் வரலாற்றின் தலைசிறந்த பேட்ஸ்மேனான சச்சின் டெண்டுல்கர் தனக்கு பிடித்த ஐந்து ஆல் ரவுண்டர்கள் பெயரை பற்றி கூறியுள்ளார்.

sachin

- Advertisement -

சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் 24 ஆண்டுகளாக இந்திய அணிக்காக ஆடியவர். அவர் செய்த பெரும்பாலான சாதனைகள்தான் தற்போது வரை யாராலும் முறியடிக்கப்படாமல் இருக்கின்றன. அவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிறந்த நாள் வந்தது. ஆனால் கரோனா வைரஸ் காரணமாக நாடே திணறிக் கொண்டிருக்கும் வேளையில் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்றும் கூறியிருந்தார்.

1991-ஆம் ஆண்டிலிருந்து இந்திய அணிக்காக ஆடி 100 சதங்கள் மற்றும் 35 ஆயிரம் ரன்களை குவித்தவர் இவர். மாபெரும் ஜாம்பவான் பேட்ஸ்மேனான இவர் சர்வதேச அளவில் தனக்கு பிடித்த 5 ஆல் ரவுண்டர்கள் பெயரை கூறியுள்ளார். இதில் 1989ம் ஆண்டு இந்திய அணிக்கு உலக கோப்பை வென்று கொடுத்த கபில்தேவ், 1992 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு உலக கோப்பை வென்று கொடுத்த இம்ரான் கான், நியூசிலாந்து அணியின் ரிச்சர்ட் ஹாட்லி, ஆஸ்திரேலியாவின் மல்கம் மார்ஷல், இங்கிலாந்தின் இயான் போதம் ஆகிய 5 பேரையும் தேர்வு செய்துள்ளார்.

kapildev

இதுகுறித்து அவர் கூறுகையில் : நான் பார்த்து வளர்ந்த 5 ஆல் ரவுண்டர்கள் இவர்கள்தான். அவர்களில் ஒருவர் உடன் ஆடியிருக்கிறேன் அவர்தான் கபில்தேவ். அடுத்தது இம்ரான்கான் அவருக்கு எதிராக ஆடியிருக்கிறேன். அதனை தொடர்ந்து நியுஸிலாந்தின் சர் ரிச்சர்ட் ஹாட்லி அவருக்கு எதிராகவும் ஆடியிருக்கிறேன். இவர்கள் தான் நான் பார்த்து வளர்ந்த ஆல்ரவுண்டர்கள் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

- Advertisement -

கிரிக்கெட் வீரர்கள் தற்போது முழுநேர ஓய்வில் இருப்பதால் சமூகவலைத்தளம் மூலம் தங்களது கருத்துக்கள், அனுபவங்கள் மற்றும் கணிப்பு என அனைத்தையும் வழங்கி வருகின்றனர். ஏற்கனவே இந்திய வீரர்கள் பலரும் இன்ஸ்டாகிராம் மூலம் நேரலையில் தங்களது கருத்துக்களை கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தனது பிறந்தநாள் அன்று சச்சின் கிரிக்கெட் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். மேலும் தொடர்ந்து கிரிக்கெட் குறித்த கணிப்புகளையும் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement