நான் பார்த்ததிலேயே இதுவே மோசமான அம்பயரிங். அவர் எனக்கு கொடுத்த முடிவு தவறானது – சச்சின் பகிர்ந்த அனுபவம்

sachin
- Advertisement -

சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்கும் அணிக்காக 1989 முதல் 2013ஆம் ஆண்டுகள் வரை 24 வருடங்கள் ஆடினார். மேலும் அவர் தனது மிகநீண்ட கிரிக்கெட் வாழ்க்கையில் பல ஜாம்பவான் வீச்சாளர்களை பார்த்தவர். டென்னிஸ் லில்லி முதல் தற்போதைய காலகட்டத்தில் மிட்செல் ஜான்சன், டேல் ஸ்டைன், ஜேம்ஸ் ஆண்டர்சன் என பலரையும் வெளுத்து வாங்கி இருக்கிறார். மேலும் அவருடன் விளையாடிய பேட்ஸ்மேன்களுக்கும் எவ்வாறு விளையாடுவது என்று கற்றுக்கொடுத்துள்ளார்.

- Advertisement -

சமீபகாலமாக தனது கிரிக்கெட் வாழ்க்கையில் நடந்த பல சுவாரசியமான சம்பவங்களை பற்றி வெளியிட்டு வருகிறார் .அந்த வரிசையில் கொரோனா ஓய்வு நேரமான தற்போது தான் சந்தித்த அம்பயரின் மோசமான முடிவு குறித்து தனது அனுபவத்தை வெளிப்படுத்தியுள்ளார். 1997ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டிரினிடாட் மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த போது நடுவரின் தவறான முடிவால் தனது விக்கெட்டை இழந்தது பற்றி பேசியுள்ளார்.

மேலும் மிகவும் சவாலான பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ஆடி தனது விக்கெட்டை தவறான முடிவால் பறிகொடுத்தது இன்னும் வருத்தமாக இருக்கிறது என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : கடந்த 1997ம் ஆண்டு டிரிடாட் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடி கொண்டிருந்தோம்.

Sachin

இந்திய அணி முதலில் பேட்டிங் பிடித்தது ஆடுகளும் பேட்டிங் செய்ய மிகுந்த சவாலாக இருந்தது. அந்த அளவிற்கு ஆடுகளம் முழுக்க முழுக்க பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைத்தது. இப்படி சவாலாக ஆடுகளம் இருந்தாலும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் வால்ஸ், அம்புரோஸ், இயான் பிஷப் என சிறப்பான பந்துவீச்சு கூட்டணி வேறு இருந்தது.

- Advertisement -

இதையெல்லாம் சவாலாக எடுத்து அவர்களுக்கு எதிராக 44 ரன்கள் விளாசினேன். மேலும் அவர்களுக்கு எதிராக நிலைத்து நின்று ஆடவும் முடிவுசெய்தேன். ஆனால் அப்போது நடுவரின் தவறான முடிவால் எனது விக்கெட்டை இழந்தேன். அந்த போட்டியில் மழை பெய்து போட்டியும் விரைவில் முடிந்தது, இந்தியா தோல்வியும் அடைந்தது.

Sachin 1

இந்த ஆட்டம் எனது வாழ்நாளில் ஒரு சிறந்த ஒரு ஆட்டமாக இருந்தது. ஆனால் நடுவரின் தவறான முடிவால் எனது விக்கெட்டை இழந்தது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் மோசமான முடிவாகும் என்று கூறியுள்ளார் சச்சின் டெண்டுல்கர். ஆனால் அம்பயரின் பெயரை சச்சின் குறிப்பிடவில்லை உங்களுக்கு அந்த அம்பயரின் பெயர் தெரிந்தால் கமெண்ட் செக்ஷனில் பதிவிடலாம்.

Advertisement