ஐ.சி.சி ரூல்ஸ் போட்டுட்டாங்க. இனிமேல் உங்களால் அந்தமாதிரி முத்தம் கொடுக்க முடியாது – மலிங்காவை கலாய்த்த சச்சின்

Sachin-1
- Advertisement -

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் விளையாட்டுப்போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் ரசிகர்கள் காண காத்திருக்கின்றனர். கடந்த 4 மாதங்களாக எந்த ஒரு கிரிக்கெட் தொடரும் நடைபெறவில்லை. மேலும் இனி வரப்போகும் கிரிக்கெட்டிலும் ரசிகர்களில் உடன் நடைபெறுமா என்பதிலும் சந்தேகம் உள்ளது.

malinga

- Advertisement -

இந்நிலையில் இந்த கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள ஓய்வு நேரத்தை கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் உரையாடுவது மற்றும் கிரிக்கெட் குறித்த தங்களது அனுபவங்களை பகிர்வது என பிஸியாக இருந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் ஐசிசியின் புதிய பந்து வீச்சு முறையை வைத்து கிண்டலாக ஒரு பதிவினை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதாவது கொரோனா வைரஸ் காரணமாக இனி வரும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்து வீச்சாளர்கள் பந்தில் எச்சிலை வைத்து தேய்ப்பதை ஐசிசி தடை விதித்துள்ளது. இதன் காரணமாக பந்துவீச்சாளர்களுக்கு பாதகம் ஏற்படும் என்று பல முன்னணி பந்துவீச்சாளர்கள் கருத்தினை தெரிவித்து வந்தனர். அந்த வகையில் பந்து வீச ஓடிவரும் முன் பந்தின் மீது முத்தமிடும் பழக்கத்தை இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா வைத்துள்ளார்.

அதனை குறிப்பிட்ட சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் அவரை செல்லமாக கிண்டல் செய்து ஜாலியாக ஒரு பதிவினை இட்டுள்ளார். அதாவது “ஐசிசியின் விதிமுறைப்படி ஒருசில பந்துவீச்சாளர்கள் இனிமேல் தங்களது பந்துவீச்சின் முறையை மாற்றிக்கொள்ள வேண்டும்”. இது குறித்து உங்களது கருத்து என்ன மலி என்று மலிங்கா பந்து முத்தமிட்டு பந்துவீச ஓட தயாராகும் ஒரு புகைப்படத்தை அவர் பதிவிட்டுள்ளார்.

இலங்கை அணியின் முன்னணி வீரரான மலிங்கா மும்பை இந்தியன்ஸ் அணியில் சச்சின் தலைமையில் பல போட்டிகளில் ஆடியுள்ளார். இவர்களின் இருவருக்குள்ளும் இருக்கும் நட்பின் அடிப்படையிலேயே சச்சின் இவ்வாறு கிண்டல் செய்து இந்த பதிவை வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement