கிரிக்கெட் உலகின் கடவுள் என வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் நாளை சென்னை அருகிலுள்ள பரனூர் கிராமத்தில் அமைந்திருக்கும் மஹேந்திரா வேர்ல்டு சிட்டியுள்ள பிஎம்டபிள்யூ நிறுவன விழாவில் கலந்து கொண்டு உரையாற்ற சென்னைக்கு வரவுள்ளார். சென்னை அடுத்துள்ள பரனூரில் அமைந்துள்ளது மஹேந்திரா வேர்ல்டு சிட்டி.
இங்கு 50க்கும் மேற்பட்ட மென்பொருள் நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.இந்த மஹேந்திரா வேர்ல்டு சிட்டியில் தான் பிஎம்டபிள்யூ கார் நிறுவனத்தின் பாகங்கள் தயாரிக்கப்படும் தொழிற்சாலை அமைந்துள்ளது. நாளை இந்த நிறுவனத்தின் 11ம் ஆண்டு விழா கொண்டாடப்படவுள்ளது.
பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்தாண்டு முதல் இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தொழிற்நுட்ப பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளது.இதற்கான ஆரம்பகட்ட பயிற்சியை நாளை மஹேந்திரா வேர்ல்டு சிட்டியில் தொடக்கிவைக்க பிஎம்டபிள்யூ நிறுவனம் முடிவுசெய்துள்ளது.
நாளைய இந்த நிகழ்விற்கு பிஎம்டபிள்யூ வின் தலைவர் விக்ரம் பாவா கலந்துகொள்ளவுள்ளார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களிடையே உரையாற்றிட சச்சின் டெண்டுல்கருக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சிக்காக தான் நாளை கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் டெண்டுல்கர் சென்னை வரவுள்ளார்.