ஐந்து வருடங்கள் கழித்து களமிறங்கிய சச்சின். தொட்ட முதல் பாலே பௌண்டரி. அசத்தல் வீடியோ இதோ.

Sachin
- Advertisement -

இந்திய கிரிக்கெட் ரசிகர்களால், கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்பட்ட சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து, தான் ஓய்வு பெறுவதாக சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தார் என்பது நாம் அறிந்ததே. இந்த நிலையில் சச்சின் ஏதாவது ஒரு சிறிய போட்டியில் விளையாடினால் கூட எங்களுக்கு போதும். அவருடைய ஆட்டத்தை எப்படியாவது நாங்கள் பார்த்தல் போதும் என்று ரசிகர்கள் பலர் ஏங்கி தவித்தனர்.

Sachin

- Advertisement -

ரசிகர்களின் ஏக்கத்தை பூர்த்தி செய்யும் விதத்தில் இன்று அந்த அற்புதம் நிகழ்ந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டிருந்த கொடூர காட்டு தீ பாதுப்புகளுக்கு நிதி திரட்டுவதற்காக ஒரு காட்சி போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் ரிக்கி பாண்டிங் தலைமையிலான அணிக்கு சச்சின் பயிற்சியாளராக பொறுப்பேற்று இருந்தார். இந்த நிலையில், அந்த போட்டியின் நடுவே சச்சின் ஒரே ஒரு ஓவர் விளையாட தயாரா என்று ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனையான எல்லிஸ் பெர்ரி ட்விட்டரில் விளையாட்டாக சச்சினுக்கு ஒரு சவால் விடுத்தார்.

அது ஒரு விளையாட்டான சவால் தான் என்றாலும், ஒரு அற்புதமான நோக்கத்திற்காக அந்த போட்டி நடைபெறுவதால் அந்த சவாலை ஏற்று சச்சின் ஒரு ஓவர் முழுவதும் விளையாடி அசத்தினார். தான் சார்ந்திருந்த ரிக்கிபாண்டிங் அணியின் மஞ்சள் நிற உடையை அணிந்து கொண்டு களத்தில் இறங்கிய சச்சின், தான் சந்தித்த முதல் பாலையே பௌண்டரிக்கு அனுப்பினார். இடைவேளையில் நடந்த இந்த ஆட்டம் தான் அந்த கட்சி போட்டியின் சிறப்பான நேரமாக கருதப்படுகிறது. அதோடு ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு சச்சின் விளையாடிய இந்த ஆட்டத்தின் வீடியோ உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்களால் ட்ரெண்ட் ஆகி உள்ளது. இதோ அந்த வீடியோ உங்களுக்காக.

Advertisement