கேப்டன் பொறுப்பில் இவர் அசத்துவார். அதற்கான அனைத்து தகுதியும் இவருக்கு இருக்கு – சச்சின் புகழாரம்

sachin
- Advertisement -

உலகம் முழுவதும் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக எந்த ஒரு சர்வதேச கிரிக்கெட் தொடரும் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த மாதம் இங்கிலாந்து வந்தடைந்த மேற்கிந்திய வீரர்கள் ஒருமாத தனிமைப்படுத்துதலுக்கு பிறகு இங்கிலாந்து அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கின்றனர். இந்த தொடருக்கான எதிர்பார்ப்பு ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

wivseng

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நேற்று (8 ஆம் தேதி ) சவுத்தாம்ப்டன் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாட ஆரம்பித்து விட்டன. இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டியின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட்டிற்கு பதிலாக அந்த அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக அறிமுகம் ஆனார்.

தனது மனைவியின் பிரசவத்திற்காக சென்றுள்ள ஜோ ரூட்டுக்கு பதிலாக ஸ்டோக்ஸ்க்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் அவர் மீது பல எதிர்பார்ப்புகள் அதிகளவில் இருக்கின்றன. மேலும் அவரது தலைமையில் இங்கிலாந்து அணி சிறப்பாக செயல்படும் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர்.

Stokes

இந்நிலையில் தற்போது பென் ஸ்டோக்ஸ்ஸின் இந்த கேப்டன் பதவி குறித்து பேட்டி அளித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் கூறியதாவது : பென் ஸ்டோக்ஸ் தனக்கு கிடைத்துள்ள கேப்டன் பொறுப்பை சிறப்பாக செய்து காட்டுவார் என்று நம்புகிறேன். அவர் ஒரு சிறந்த வீரர் சரியான முடிவுகளை சரியான நேரத்தில் எடுக்கும் வீரர்.

- Advertisement -

அவரது முடிவில் எந்த தடுமாற்றமும் இருக்காது. மேலும் அவர் நிதானமாக சிந்தித்து செயல்படும் திறனுடையவர் என்று சச்சின் டெண்டுல்கர் கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய சச்சின் கூறுகையில் : இங்கிலாந்து அணியை முன்னின்று வழி நடத்துவதில் அவரால் சிறப்பாக பங்களிப்பை அளிக்க முடியும்.

Stokes-1

அவரை நான் சில காலங்களுக்கு முன்பு பார்த்த பொழுது மிகவும் பாசிட்டிவாக, எனர்ஜியாக காணப்பட்டார். இப்போதும் அதே துடிப்புடன் அவர் விளையாடி வருகிறார். இங்கிலாந்து அணியின் சிறந்த ஆல்ரவுண்டர் வரிசையில் உள்ள அவரது ஆட்டம் என்னை வியக்க வைத்துள்ளது என்று சச்சின் டெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.

Advertisement