ஆலோசனை வழங்கிய சச்சின். வாழ்த்துக்களை பெற்ற டெல்லி வீரர் இவர்தான் – வீடியோ

Sachin
- Advertisement -

நேற்றைய மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி துவங்கும் முன் மும்பை அணியின் ஆலோசகரான சச்சின் டெல்லி அணியின் இளம் வீரரான பிரிதிவி ஷாவை அழைத்து சில பேட்டிங் ஆலோசனைகளை வழங்கினார். மேலும், சச்சினிடம் இருந்து வாழ்த்துக்களை பெற்று அந்த இடத்தில் இருந்து சென்றார். இதோ அந்த வீடியோ :

- Advertisement -

சச்சின் போன்று பேட்டிங் ஸ்டைலில் ஆடும் பிரிதிவி ஷா. அடுத்த சச்சின் என்று பல கிரிக்கெட் விமர்சகர்கள் கூறிவருகின்றனர். 19 வயதே ஆகும் பிரிதிவி ஷா ஏற்கனவே இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்து முதல் போட்டியிலேயே சதமடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய போட்டியில் 6 பந்துகளில் 7 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.

நேற்று இரவு 8 மணிக்கு நடந்த போட்டியில் மும்பை அணியும், டெல்லி அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய டெல்லி அணி பண்ட்டின் அதிரடி ஆட்டம் மூலம் 20 ஓவர்களில் 213 ரன்களை குவித்தது. இதனால், 214 ரன்கள் மும்பை அணிக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

அடுத்து ஆடிய மும்பை அணி 19.2 ஓவர்களில் 176 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. டெல்லி அணி சார்பில் ரபாடா சிறப்பாக பந்துவீசி 23 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். 27 பந்துகளில் 78 ரன்களை அடித்த டெல்லி அணி வீரர் பண்ட் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Advertisement