என் போனில் எப்போதும் எஸ்.பி.பி யின் இந்த பாடல் இருக்கும் – சச்சின் இரங்கல்

Spb
- Advertisement -

மறைந்த ஜாம்பவான் பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் அவருக்கு அனைத்து தரப்பிலிருந்தும் தொடர்ந்து அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவரது மறைவை தமிழகம் ,இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள இசை ரசிகர்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

Spb 1

- Advertisement -

அவரது பாடலுக்கு வாயசைக்காத இசை ரசிகர்களை இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு உலகம் முழுவதும் அனைத்து தரப்பினரும் அவரது பாடல்களை ரசித்து வந்தனர். கிட்டத்தட்ட உலகத்தில் தற்போது வரை 50 ஆயிரம் பாடல்கள் பாடிய ஒரே பாடகர் இவர் மட்டுமே.

இப்படி பல சாதனைகள் படைத்துள்ள பாலசுப்பிரமணியம் கடந்த 2 வாரமாக கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவரது உடல்நிலை 2 வாரமாக கவலைக்கிடமாக இருந்தது. தவிர்த்து அவ்வப்போது அவற்றிலிருந்து மீண்டு வந்தாலும், அவருக்கு சுவாசத்தில் பிரச்சனை இருந்தது.

Spb 2

இதன் காரணமாக சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் தனது இன்னுயிரை இழந்து காலமானார். இதன் காரணமாக அவருக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி இருக்கிறார்.

மேலும் “அவரது இசையை கேட்பது எனக்கு எப்போதும் பிடிக்கும் அவரது மறைவால் எனக்கு ஆழ்ந்த வருத்தங்கள் ஏற்பட்டுள்ளது. சாகர் என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற அவருடைய “சர்ச் மெரே யார் ஹை” என்ற பாடல் என்னுடைய மொபைல் போனில் எப்போதுமிருக்கும். அது எனக்கு மிகவும் பிடித்த பாடல். அவரது ஆத்மா தற்போது ஓய்வு எடுக்கட்டும் ,அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு நான் பிரார்த்தனை செய்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

Advertisement