இறுதி போட்டியில் பவுண்டரிகளை வைத்து வெற்றி கொடுத்ததுக்கு பதிலாக ஐ.சி.சி இப்படி செய்து இருந்தால் சுவாரசியமாக இருந்திருக்கும் – சச்சின்

sachin1
- Advertisement -

நடப்பு உலகக் கோப்பை தொடரை இங்கிலாந்து அணி பவுண்டரிகளின் அடிப்படையில் வென்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்தது. ஐ.சி.சி யின் இந்த விதி குறித்து பலரும் எதிர்ப்பு கருத்துக்களை கூறி வருகின்றனர். மேலும் முன்னாள் வீரர்கள், இந்நாள் வீரர்கள் என பலரும் தங்களது கருத்துக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர்.

England

இந்நிலையில் உலக கோப்பை இறுதி போட்டியில் பவுண்டரி விதி குறித்து அனைவரும் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் இறுதிப்போட்டியில் பயன்படுத்தப்பட்ட விதி குறித்து தனது கருத்தினை அளித்தார். அதில் அவர் கூறியதாவது :

- Advertisement -

லீக் சுற்றில் முன்னணியில் உள்ள அணிக்கு முன்னிலை தர வேண்டும். ஏனெனில் தொடர் முழுவதும் அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். மேலும் இந்த உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் சூப்பர் ஓவர் டை ஆனதும் மீண்டும் ஒரு சூப்பர் ஓவரை வைத்திருக்கலாம் அவ்வாறு செய்திருந்தால் போட்டியும் சுவாரசியமாக இருந்து இருக்கும்.

Archer 2

வெற்றியாளரும் சரியான முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பார்கள். அதைவிட்டு விட்டு இந்த பவுண்டரிகள் மூலம் பெற்று அறிவித்தது சரியானதாக எனக்குத் தோன்றவில்லை என்றும் சச்சின் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement