சச்சின் மேலும் ஒரு சாதனையை சமன் செய்த ஜோ ரூட்.. முறியடிக்கவும் கிடைத்துள்ள வாய்ப்பு – விவரம் இதோ

Root
- Advertisement -

இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான ஜோ ரூட் இதுவரை இங்கிலாந்து அணிக்காக 146 சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 34 சதம் மற்றும் 64 அரைசதம் என 12,402 ரன்களை குவித்துள்ளார். ஒரு கட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலியுடன் ஒப்பிட்டு பேசப்பட்ட ஜோ ரூட் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி ஓரங்கட்டி வேற லெவலில் சென்று கொண்டிருக்கிறார்.

சச்சினை சமன் செய்த ஜோ ரூட் :

தற்போது 33 வயதாகும் ஜோ ரூட் கிட்டத்தட்ட 12 ஆயிரத்து 500 ரன்கள் அடித்துள்ள வேளையில் இன்னும் சில ஆண்டுகளில் சச்சின் டெண்டுல்கரின் அதிக ரன்கள் சாதனையை முறியடிக்கும் வாய்ப்புள்ளதாக முன்னாள் வீரர்கள் பலரும் கூறி வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற முடிந்த தொடரில் ஜோ ரூட் இரண்டு சதங்களுடன் 375 ரன்கள் குவித்திருந்த வேளையில் அவருக்கு இந்த தொடருக்கான தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. இதன் மூலம் சச்சின் டெண்டுல்கரின் மற்றும் ஒரு சாதனையை சமன் செய்து அசத்தியுள்ளார்.

அந்த சாதனை யாதெனில் : இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை தொடர் நாயகன் விருதை வென்ற பேட்ஸ்மேன் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் ஐந்து முறை தொடர் நாயகன் விருது வென்று சாதனை நிகழ்த்தி இருந்தார். அவரது இந்த சாதனையை தற்போது ஜோ ரூட் சமன் செய்துள்ளார்.

- Advertisement -

ஒட்டுமொத்தமாக டெஸ்ட் தொடரில் அதிக தொடர் நாயகன் விருது பெற்றவர் பட்டியலில் முரளிதரன் 11 முறை தொடர் நாயகன் விருது வென்று முதல் இடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்து இந்திய வீரர் அஸ்வின் பத்து முறையும், ஜாக் காலிஸ் ஒன்பது முறையும் தொடர் நாயகன் விருதினை வென்றிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கோலி இரட்டை சதமடிப்பாரு.. வங்கதேச தொடருக்கான தனது இந்திய பிளேயிங் லெவனை தேர்ந்தெடுத்த பசித் அலி

ஏற்கனவே சச்சினின் சாதனையை நோக்கி வேகமாக சென்று கொண்டிருக்கும் ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனையையும், ஒட்டுமொத்தமாக 50 சதங்கள் அடித்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement