பாண்டிங் அணிக்கு பயிற்சி அளிக்க உள்ள சச்சின். அதில் இப்படி ஒரு நல்ல காரியம் இருக்கா ? – விவரம் இதோ

Sachin
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக காட்டுத்தீயால் 1.20 கோடி ஏக்கர் காடுகள் நாசமாகி உள்ளன. 48 கோடி விலங்குகள் இந்த காட்டு தீயால் அழிந்துள்ளது. இந்த சம்பவம் ஆஸ்திரேலியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

Bushfire

- Advertisement -

காட்டுத் தீயை அணைக்கும் பணியில் அந்நாட்டு தீயணைப்பு வீரர்கள், பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என பலதரப்பட்ட மக்களும் ஒன்று திரண்டு அதற்காக உழைத்து வருகின்றனர். இந்நிலையில் அதற்காக நிதி நிவாரணம் திரட்டும் நோக்கில் பிப்ரவரி 8 ஆம் தேதி புஷ்பேக் பயர் எனும் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான ரிக்கி பாண்டிங் அணியும், ஷேன் வார்ன் அணியும் விளையாட உள்ளது. இந்நிலையில் ரிக்கி பாண்டிங் தலைமையிலான அணிக்கு சச்சின் டெண்டுல்கரும், ஷேன் வார்ன் தலைமையிலான அணிக்கு முன்னாள் மேற்கிந்திய வீரர் வால்ஷ்-வும் பயிற்சி அளிக்க உள்ளனர்.

Warne

மேலும் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பலர் இடம் பிடித்து விளையாடி இருக்கின்றனர். குறிப்பாக கில்க்ரிஸ்ட், பிரெட் லீ, ஜஸ்டின் லாங்கர், மைக்கேல் கிளார்க் மற்றும் ஷேன் வாட்சன் ஆகியோர் பங்கேற்ற உள்ளனர். இந்த போட்டி நடத்தப்பட்டு இதில் வரும் அனைத்து தொகையும் அந்த காட்டுத்தீ பாதிப்பிற்கான நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement