உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்காக உலக நாடுகள் கடுமையாக போராடி வருகிறது. தற்போதுவரை பல்லாயிரக்கணக்கானோர் இதனால் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது. இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதன் காரணமாக இந்தியாவில் 21 நாள் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல பிரபலங்களும் கிரிக்கெட் வீரர்களும் அரசு ஊழியர்களும் தங்களால் முடிந்த உதவியை அரசாங்கத்திற்கு செய்து வருகின்றனர்.
இந்த வைரஸின் தாக்கத்தை எதிர்த்து போராடுவதற்கு காக்கும் மருத்துவ உபகரணங்கள் வாங்கவும் மக்களுக்கு உதவி செய்யவும் இந்த உதவித்தொகை பயன்படும். முன்னதாக பிசிசிஐ தலைவராக உள்ள சவுரவ் கங்குலி 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரிசி மூட்டைகளை ஏழை மக்களுக்கு வழங்கியுள்ளார்.
ஏற்கனவே இந்திய அணியின் முன்னாள் வீரரும், பாராளுமன்ற எம்.பி ஆன கம்பீர் மருத்துவ உபகரங்களுக்காக 50 லட்சம் ரூபாய் வழங்கி உள்ளார். இவரை தொடர்ந்து இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 50 லட்சம் நிதி உதவி வழங்கி உள்ளார். ரோஹித் 80 லட்சம் மற்றும் விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஆகியோர் இணைந்து 3 கோடி வழங்கினார்கள்.
இதனைத்தொடர்ந்து இந்திய அணியின் வீரரான சுரேஷ் ரெய்னா (ரூபாய் 52 லட்சம்) கொரோனா வைரஸ் பாதிப்பிற்காக அளித்துள்ளார். அதில் (31 லட்சம் ரூபாய்) பிரதம மந்திரியின் தேசிய பேரிடர் மீட்பு கணக்கிற்கும், (21 லட்சம்) உத்திரபிரதேச முதல்வர் மீட்பு பணிக்கு வழங்கி உள்ளார். ஆகியோரை தொடர்ந்து தற்போது யுவராஜ் சிங் தனது நிதியுதவியை 50 லட்சம் வழங்கியுள்ளார்.
தொடர்ந்து புஜாரா, ரஹானே மற்றும் பதான் சகோதரர்கள் மட்டுமின்றி இந்திய அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான கவாஸ்கர் 59 லட்சம் நிதியுதவி வழங்கினார். இந்நிலையில் கம்பீர் ஏற்கனவே 50லட்சம் வழங்கியதை தொடர்ந்து தனது எம்.பி பதவியின் இரண்டு வருட சம்பளத்தை அப்படியே பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். இதனை தொடர்ந்து தற்போது சச்சின் மீண்டும் ஒரு உதவியை வழங்க முன்வந்துள்ளார்.
Thank you so much @sachin_rt ji, especially in these times your support to help us spread the word and break the chain has been incredible. This measure of quarantine centre is only preparing for all eventualities, working to keep away from it 🙏🏻☺️ https://t.co/5ldvlvJi1S
— Aaditya Thackeray (@AUThackeray) April 9, 2020
அதன்படி மும்பை தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று சச்சினிடம் தங்களது தொண்டு அமைப்பிற்கு உதவுமாறு கோரிக்கை விடுத்தது. அவர்களின் கோரிக்கையை ஏற்ற சச்சின் மாதம் 5000 பேருக்கு உணவளிக்கும் அனைத்து செலவுகளையும் தான் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார். இதனை உறுதிசெய்த அந்த அமைப்பு அதனை தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. மேலும் முன்வந்து உதவி செய்த சச்சினுக்கு வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துள்ளது.