சாம்சன் வேண்டாம்.. வங்கதேச டி20 தொடரில் ரிங்குவை அங்க எறக்குனா அட்டகாசம் பண்ணிடுவாரு.. சபா கரீம்

Saba Karim
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்துக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதை முடித்துக் கொண்டு வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. அந்தத் தொடரில் விளையாடுவதற்காக சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதில் கடந்த ஜிம்பாப்வே தொடரில் அறிமுகமாகி அதிரடி காட்டிய அபிஷேக் சர்மா துவக்க வீரராக தேர்வாகியுள்ளார்.

ஆனால் சுப்மன் கில், ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிசான் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இதன் காரணமாக அபிஷேக் சர்மாவுடன் துவக்க வீரராக களமிறங்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அது போன்ற சூழ்நிலையில் சஞ்சு சாம்சன் துவக்க வீரராக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ரிங்கு சிங் இடம்:

ஏனெனில் அவர் தான் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக கடந்த காலங்களில் அவ்வப்போது துவக்க வீரராக களமிறங்கி அசத்தியுள்ளார். அவரைத் தவிர்த்து ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், ரியான் பராக், நித்திஷ் ரெட்டி, சிவம் துபே, ஜிதேஷ் சர்மா போன்ற வங்கதேச டி20 தொடரில் தேர்வாகியுள்ள மற்ற பேட்ஸ்மேன்கள் பெரும்பாலும் மிடில் ஆடரில் விளையாடக் கூடியவர்கள்.

இந்நிலையில் வங்கதேச டி20 தொடரில் அபிஷேக் சர்மாவுடன் ரிங்கு சிங்கை துவக்க வீரராக களமிறக்கினால் இந்திய அணியின் வெற்றிக்கு அதிக மதிப்பை சேர்ப்பார் என்று சபா கரீம் தெரிவித்துள்ளார். முன்னாள் இந்திய வீரர் மற்றும் தேர்வுக்குழு உறுப்பினரான அவர் இது பற்றி ஜியோ சினிமா சேனலில் பேசியது பின்வருமாறு. “வங்கதேச தொடரில் அபிஷேக் சர்மாவுடன் ரிங்கு சிங்கை துவக்க வீரராக நாம் பார்ப்பதற்கு வலுவான வாய்ப்புள்ளது”

- Advertisement -

ஓப்பனிங்கில் ரிங்கு:

“இந்திய அணியில் இதுவரை நம்பர் 6 அல்லது 7 உட்பட தமக்கு கிடைத்த பேட்டிங் இடத்தில் ரிங்கு சிறப்பாகவே செயல்பட்டுள்ளார். இருப்பினும் அந்த இடங்களில் அவருக்கு நிறைய பந்துகளை எதிர்கொள்ளும் வாய்ப்பு கிடைப்பதில்லை. எனவே முழுமையான பேட்ஸ்மேனான அவர் முழுமையான வாய்ப்புகளை பெற்று அதிக பந்துகளை சந்தித்தால் இந்திய அணிக்கு நிறைய மதிப்பை சேர்ப்பார்”

இதையும் படிங்க: தோனிக்கு நம்பர் ஒன், 2 ஆசையே இல்ல.. சிஎஸ்கே தக்க வைக்கும் 4 வீரர்கள் இவங்க தான்.. அஜய் ஜடேஜா பேட்டி

“எனவே அபிஷேக் ஷர்மா மற்றும் ரிங்கு ஆகியோர் துவக்க வீரர்களாக விளையாட வாய்ப்புள்ளது” என்று கூறினார். இருப்பினும் ரிங்கு பெரும்பாலும் தமது கேரியரில் மிடில் ஆர்டரில் மட்டுமே விளையாடியுள்ளார். அத்துடன் அபிஷேக் சர்மாவும் இடதுகை வீரராக இருப்பதால் மற்றொரு இடது கை பேட்ஸ்மேனான ரிங்கு சிங் வங்கதேச தொடரில் துவக்க வீரராக வாய்ப்பு பெறுவாரா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Advertisement