
ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக ஜிம்பாப்வே நாட்டில் விளையாடியது. அங்கு நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட தொடரை 4 – 1 என்ற கணக்கில் வென்ற இந்தியா தங்களை சாம்பியன் அணி என்பதை நிரூபித்தது. குறிப்பாக சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதால் சுப்மன் கில் தலைமையில் இளம் வீரர்களுடன் அந்த தொடரில் விளையாடிய இந்தியா வெற்றி கண்டது.
இதைத்தொடர்ந்து இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா அங்கு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. அதில் முதலாவதாக நடைபெறும் டி20 தொடரில் ஓய்வு பெற்றதால் ரோஹித் மற்றும் விராட் கோலி ஆகியோர் விளையாட மாட்டார்கள். இருப்பினும் ஹர்திக் பாண்டியா, சூரியகுமார் உள்ளிட்ட மற்ற சீனியர் வீரர்கள் விளையாடுவதற்கு பிரகாச வாய்ப்புள்ளது.
வாய்ப்பு கொடுங்க:
அதன் காரணமாக ஜிம்பாப்வே தொடரில் அசத்திய சில இளம் வீரர்களுக்கு இலங்கை தொடரில் வாய்ப்பு கிடைப்பது கடினமாகியுள்ளது. இந்நிலையில் இலங்கைத் தொடரில் ஹர்திக் பாண்டியா, சூரியகுமார் போன்ற யார் வந்தாலும் அபிஷேக் சர்மாவை இந்திய அணி கழற்றி விட்டு விடக்கூடாது என சபா கரீம் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஏனெனில் ஜிம்பாப்வே தொடரில் அறிமுகமாகி சதமடித்த அபிஷேக் சர்மா பந்து வீச்சில் 1 விக்கெட் எடுத்தார். எனவே வருங்காலங்களில் இந்திய அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் பகுதிநேர பவுலராக இல்லாத குறையை அபிஷேக் ஷர்மா தீர்ப்பார் என்று அவர் கூறியுள்ளார். அதனால் புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் இலங்கைத் தொடரில் அவரை விட்டுவிடக் கூடாது என்றும் சபா கரீம் கேட்டுக் கொண்டுள்ளார்.
முன்னாள் இந்திய தேர்வுக்குழு உறுப்பினர் மற்றும் வீரரான அவர் இது பற்றி சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “டாப் ஆர்டரில் தான் முக்கியமான இடங்கள் இருக்கின்றன. அங்கே தேர்வாளர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் கில் ஆகியோரை தேர்ந்தெடுப்பார்கள் என்று நினைக்கிறேன். அதே சமயம் அந்த தொடரில் அபிஷேக் ஷர்மா 15 பேர் கொண்ட இந்திய அணியில் இருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். ஏனெனில் உங்களிடம் 3, 4வது இடங்களில் ரிஷப் பண்ட், சூரியகுமார் உள்ளனர்”
இதையும் படிங்க: டி20 அணியில் விராட், ரோஹித் இடத்துக்கு ஆள் கிடைச்சாச்சு.. இந்த 2 பசங்க ரெடியாகிட்டாங்க.. சபா கரீம் நம்பிக்கை
“அதே சமயம் இது யார் கேப்டனாக இருக்கப் போகிறார் என்பதைப் பொறுத்தது. மேலும் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்கும் கௌதம் கம்பீர் என்ன நினைக்கிறார், அணியை எப்படி எடுத்துச் செல்ல விரும்புகிறார் என்பதை பொறுத்து இது அமையும். அத்துடன் ருதுராஜ் கெய்க்வாட் வாய்ப்புக்காக காத்திருக்கிறார் எனவே டாப் ஆர்டரில் விளையாட நிறைய வீரர்கள் காத்திருக்கின்றனர்” என்று கூறினார்.