யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்த விடயத்தில் கவனம் செலுத்தியே ஆகனும் – சபா கரீம் கருத்து

Saba Karim
- Advertisement -

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து இந்த தொடரின் ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்துள்ளது. அதன் காரணமாக இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்துடன் தற்போது இந்திய அணி விளையாடி வருகிறது.

யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இதை சரி செய்தே ஆக வேண்டும் : சபா கரீம்

அந்த வகையில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது இன்று நவம்பர் 22 ஆம் தேதி கவுகாத்தி மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரின் போது முதல் ஆட்டத்தில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இரண்டாவது ஆட்டத்தின் போது சிறப்பாக விளையாட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

- Advertisement -

ஏனெனில் நடைபெற்று முடிந்த முதலாவது போட்டியின் முதல் இன்னிங்சில் 12 ரன்கள் சேர்த்த அவர் இரண்டாவது இன்னிங்சில் டக் அவுட்டாகி இருந்தார். டெஸ்ட் போட்டிகளில் அதிரடியான துவக்கத்தை அளித்து மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜெய்ஸ்வால் இப்படி தென்னாப்பிரிக்கா தொடரின் முதல் போட்டியில் சொதப்பியது பலரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மீண்டும் ஃபார்மிற்கு திரும்ப என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து முன்னாள் இந்திய வீரரான சபா கரீம் சில அறிவுரைகளை வழங்கி உள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : டெஸ்ட் போட்டிகளை பொறுத்த வரை ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடுவது நல்லது தான்.

- Advertisement -

ஆனாலும் அவரது ஷாட் செலக்ஷனில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் அதிரடியான துவக்க வீரரான அவர் பொறுமைய இழந்து தேவையில்லாத ஷாட்டை விளையாடி ஆட்டமிழக்கிறார். டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை அப்படி விளையாட கூடாது. முடிந்த அளவுக்கு பந்துகளை எதிர்கொண்டு சரியான நேரத்தில் கிடைக்கும் எளிதான பந்துகளில் பவுண்டரி அடித்தும் அதிரடியாக விளையாடலாம்.

இதையும் படிங்க : தோனிக்கு பின் வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்.. 2வது டெஸ்டில் 2 மாற்றங்கள் செய்து பேட்டி

அந்த வகையில் இனி ஜெய்ஸ்வால் தேவையற்ற பந்துகளை அடிக்காமல் எளிதாக வரும் பந்துகளை மட்டும் அடித்து விளையாட வேண்டும். அப்படி அவர் ஷாட் செலக்சனில் கவனம் செலுத்தினால் மீண்டும் அவரால் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என சபா கரீம் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement