தோனிக்கு பின் வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்.. 2வது டெஸ்டில் 2 மாற்றங்கள் செய்து பேட்டி

Rishabh Pant 2
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 15 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் தோல்வியைச் சந்தித்தது. அடுத்ததாக 2வது போட்டி நவம்பர் 22ஆம் தேதி அசாம் மாநிலத்தில் உள்ள கௌகாத்தியில் காலை 9:00 மணிக்குத் துவங்கியது. அப்போட்டியிலிருந்து இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் கழுத்து வலியால் விலகினார்.

அதன் காரணமாக துணை கேப்டன் ரிஷப் பண்ட் இந்தியாவை தலைமைத் தாங்கும் பொறுப்பை ஏற்றார். அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை தலைமைத் தாங்கும் 2வது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்தார். இதற்கு முன் 2008 – 2014 வரையிலான காலகட்டங்களில் ஜாம்பவான் எம்எஸ் தோனி இந்தியாவை தலைமைத் தாங்கிய முதல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக சாதனை படைத்திருந்தார்.

- Advertisement -

சுப்மன் கில் விலகல்:

அந்த சூழ்நிலையில் துவங்கிய 2வது போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இந்திய அணியில் கில்லுக்கு பதிலாக நித்திஷ் ரெட்டி விளையாடுவதாக ரிஷப் பண்ட் அறிவித்தார். அத்துடன் 4 ஸ்பின்னர்கள் தேவையில்லை என்பதால் அக்சர் பட்டேலுக்கு பதிலாக தமிழக வீரர் சாய் சுதர்சன் சேர்க்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

இது பற்றி ரிஷப் பண்ட் பேசியது பின்வருமாறு. “கண்டிப்பாக கேப்டனாக இந்தியாவை தலைமைத் தாங்குவது பெருமையான தருணமாகும். ஒரு வீரராக நீங்கள் உங்களுடைய நாட்டை தலைமைத் தாங்குவதற்கு எப்போதும் ஆசைப்படுவீர்கள். எனக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்த பிசிசிஐக்கு நன்றியுடையவனாக இருக்கிறேன். அதைப்பற்றி சிந்திக்காவிட்டாலும் கிடைத்த வாய்ப்பை 2 கைகளாலும் பிடித்துக் கொண்டு உங்களுடைய அணிக்காக நல்லவற்றை செய்ய வேண்டும்”

- Advertisement -

இந்திய அணியில் 2 மாற்றங்கள்:

“எங்களுடைய அணியில் உங்கள் மீது கவனம் செலுத்தி, அணியாக முன்னேற வேண்டிய விஷயங்களை பார்க்க வேண்டும், அணியாக சேர்ந்து ஒவ்வொரு தருணத்திலும் போராட வேண்டும் என்ற சூழ்நிலையே நிலவுகிறது. பிட்ச் பேட்டிங் செய்வதற்கு நன்றாக இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம். அதே சமயம் முதலில் பந்து வீசுவதும் மோசமான தேர்வல்ல”

இதையும் படிங்க: இந்தியா, இங்கி, ஆஸியில் அதை எதிர்கொள்ள யாருமே இல்லையா? எல்லாரும் காணாம போய்ட்டாங்க.. ஃகைப் கவலை

“சுப்மன் மெதுவாக குணமடைந்து வருகிறார். இப்போட்டியில் விளையாட ஆர்வத்துடன் இருந்தாலும் அவருடைய உடல் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. எனவே வலுவாக கம்பேக் கொடுக்க உள்ள அவருக்கு பதில் நிதிஷ் விளையாடுகிறார். அக்சருக்கு பதில் சாய் சுதர்சன் உள்ளே வருகிறார்” என்று கூறினார். இந்த 2 மாற்றங்களைத் தவிர்த்து கொல்கத்தா போட்டியில் விளையாடிய ஏனைய வீரர்களும் மீண்டும் இப்போட்டியில் இந்தியாவுக்காக விளையாடுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement