புஜாராவிற்கு பதிலாக டெஸ்ட் அணியில் 3 ஆவது வீரராக இவரை விளையாட வைக்கலாம் – சபா கரீம் கருத்து

Karim
Advertisement

இந்திய டெஸ்ட் அணியின் அனுபவ டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான புஜாரா கடந்த பல ஆண்டுகளாகவே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 2021ம் ஆண்டு முழுவதும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடிக்காமல் விளையாடி வரும் அவர் சராசரியாக 29 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். இதன் காரணமாக அவர் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும் அவரால் முன்பு போன்று களத்தில் நின்று பெரிய ரன் குவிப்பிற்கு செல்லமுடிவதில்லை.

Pujara

அதுமட்டுமின்றி புஜாராவின் தொடர்ச்சியான மோசமான பேட்டிங் காரணமாக அவரை வெளியேற்றி விட்டு இளம்வீரருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற விமர்சனங்கள் அதிகளவில் எழுத்துவங்கியுள்ளன. இந்நிலையில் இந்திய அணியின் மூன்றாவது வீரரான புஜாராவிற்கு பதிலாக மாயங்க் அகர்வாலை களமிறங்கலாம் என இந்திய அணியின் முன்னாள் தேர்வுக் குழு உறுப்பினரான சபா கரீம் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : அகர்வால் டொமஸ்டிக் கிரிக்கெட்டில் 4-5 ஆண்டுகளாக சிறப்பான ஆட்டத்தை தொடர்ச்சியாக வெளிப்படுத்தியவர். அதோடு மட்டுமின்றி புதிய பதில் நன்றாக விளையாடக் கூடியவர் என்பதனால் 3-வது வீரராக களமிறங்கும் பட்சத்தில் அவரால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும்.

agarwal

மேலும் வேகப்பந்து வீச்சாளர்கள், சுழற்பந்து வீச்சாளர்கள் என இரு தரப்பினரையும் சிறப்பாக எதிர் கொள்ளும் திறமையும் அவரிடம் உள்ளதால் மூன்றாவது இடத்தில் இறங்க அவர் தகுதியானவர் என்று சபா கரீம் கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : நிச்சயம் மாயங்க் அகர்வால் 3-வது இடத்தில் களம் இறங்கும் போது அவருக்கு பின்னால் வரும் வீரர்களுடன் நிலைத்து நின்று விளையாடி அவரால் பெரிய பாட்னர்ஷிப்களை அமைக்க முடியும் என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க : புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டதும் விராட் கோலி குறித்து பேசிய ரோஹித் சர்மா – முழுவிவரம் இதோ

அதேபோன்று டாப் 3 வீரர்களில் ஒரு நிலைத்து நின்றுவிட்டால் கூட மிடில் ஆர்டரில் வரும் 4, 5, 6 ஆகிய இடங்களில் வரும் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்றும் சபா கரீம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement