- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இப்போ சந்தோசமா ரிஷப் பண்ட்? இந்தியாவை மூலையில் தள்ளிய உங்களால் பதிலே சொல்ல முடியாது.. சபா கரீம்

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிக்கு எதிராக முதல் போட்டியில் தோற்ற இந்தியா 2வது போட்டியிலும் தோல்வியை சந்திக்கும் சூழ்நிலையில் இருக்கிறது. நவம்பர் 22ஆம் தேதி கௌகாத்தியில் துவங்கிய அப்போட்டியில் முதலில் விளையாடிய தெனாப்பிரிக்கா 489 ரன்கள் குவித்தது. அடுத்ததாக விளையாடிய இந்திய அணியை 201 ரன்களுக்கு சுருட்டி வீசிய தென் ஆப்பிரிக்கா 288 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

அதனுடன் விளையாடும் தெனாப்பிரிக்கா 3வது நாள் முடிவில் மொத்தம் 314 ரன்களை முன்னிலையாகப் பெற்றுள்ளது. அதனால் இப்போட்டியில் இந்தியா வெற்றி பெறுவது மிகவும் கடினமானதாக பார்க்கப்படுகிறது. முன்னதாக அப்போட்டியில் 9/0 என்ற நிலையில் 3வது நாள் ஆட்டத்தை துவங்கிய இந்தியா குறைந்தது 400 ரன்கள் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

சொதப்பிய கேப்டன்:

அதற்கு ஜெய்ஸ்வால் 58, ராகுல் 22 ரன்கள் அடித்த நல்ல துவக்கத்தையும் கொடுத்தனர். ஆனால் அடுத்து வந்த சாய் சுதர்சன், துருவ் ஜுரேல், ரிஷப் பண்ட், ஜடேஜா, நிதிஷ் ரெட்டி ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். குறிப்பாக கேப்டனாக முன்னின்று இந்தியாவை முன்னிலைப்படுத்த வேண்டிய ரிஷப் பண்ட் இறங்கி வந்து சிக்சர் அடிக்க முயற்சித்து அவுட்டானது இந்தியாவுக்கு பெரிய பின்னடைவைக் கொடுத்தது.

இந்நிலையில் பொறுப்புடன் விளையாட வேண்டிய ரிஷப் பண்ட் பதில் சொல்ல முடியாதளவுக்கு மோசமான ஷாட்டை அடித்து அவுட்டானதாக முன்னாள் வீரர் சபா கரீம் தெரிவித்துள்ளார். அதனால் இந்தியா கம்பேக் கொடுக்க முடியாத அளவுக்கு பின்னடைவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கும் அவர் இப்போது சந்தோசமா? என்ற வகையில் விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

மூலையில் இந்தியா:

“இதைப் பற்றி நீங்கள் எப்படி விளக்குவீர்கள்? அது மிகவும் கடினம். ஒருவேளை தம்முடைய கேரியரில் முதல் முறையாக ரிஷப் பண்ட் இப்படி அவுட்டானதற்கான காரணத்தை விளக்க முடியாத நிலைமையில் இருக்கலாம். ஏனெனில் அது தேநீர் இடைவெளி முடிந்ததும் நடந்தது. கேப்டனாக இருக்கும் நீங்கள் பொறுப்பை உங்களுடைய தோளில் எடுத்துக்கொள்ள வேண்டும். சர்வதேச அளவில் போதுமானளவு விளையாடிய அனுபவத்தைக் கொண்டுள்ள நீங்கள் அழுத்தத்தை உள்வாங்கி முன்னுதாரணமாக அணியை தலைமைத் தாங்க வேண்டும்”

இதையும் படிங்க: கவுதம் கம்பீர் தொடர்ச்சியாக செய்யும் தவறை விமர்சித்து சர்பராஸ் கானுக்கு ஆதரவு – தெரிவிக்கும் ரசிகர்கள்

“அந்த அணுகுமுறை அவரிடம் தவறியது. நீங்கள் உங்களுடைய இயற்கையான அதிரடி ஆட்டத்தை விளையாட வேண்டும் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அதை உங்களால் களத்தில் அதிக நேரத்தை செலவிட்டும் செய்ய முடியும். இப்படிப்பட்ட அதிக ரிஸ்க் நிறைந்த ஷாட்டை அடித்ததால் தற்போது நீங்கள் உங்களுடைய மொத்த அணியையும் மைதானத்தின் மூலையில் நிறுத்தியுள்ளீர்கள். அதன் காரணமாக கடினமான இடத்திற்குள் சென்றுள்ள இந்தியா அதிலிருந்து மீண்டு வருவது மிகவும் கடினம்” என்று கூறினார்.

- Advertisement -