இந்தாண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பையை இந்த அணிதான் வெல்லும் – சபா கரீம் பேட்டி

Karim
Advertisement

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற இருந்த டி20 உலகக் கோப்பை தொடரானது இங்கு இருந்து வரும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை காரணமாக இந்தியாவில் நடைபெறுவது சிக்கலாகி உள்ளது. மேலும் அக்டோபர் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் கொரோனா வைரஸ் மூன்றாவது அலை தாக்கம் அதிகரிக்கும் என்ற காரணத்தினால் இந்தியாவில் இந்த டி20 உலகக் கோப்பை தொடரை நடத்த முடியாது என்று வல்லுநர்கள் தெரிவித்திருந்தனர்.

மேலும் பிசிசிஐ-யும் இது குறித்து ஆலோசனை செய்கையில் இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரசின் மூன்றாவது அலையின் தாக்கம் காரணமாக இங்கு நடத்த முடியாது என்றும் டி20 உலகக் கோப்பையை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தலாம் என்றும் முடிவு செய்தது. எனவே இந்த ஆண்டு எஞ்சியுள்ள ஐபிஎல் தொடர் அங்கு முடிவடைந்தவுடன் டி20 உலகக்கோப்பை தொடரையும் அங்கேயே நடத்த முடிவு செய்துள்ளது.

- Advertisement -

ஏற்கனவே இந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில் அனைத்து அணிகளும் தங்கள் அணியை வலுவாக கட்டமைத்து வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சபா கரீம் இந்த டி20 உலகக் கோப்பையை வெல்லும் அணி குறித்து தனது கருத்தினை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் : எனது எண்ணப்படி வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த தொடரை கைப்பற்ற வாய்ப்பு அதிகமாக உள்ளது.

Wi

அதனை தொடர்ந்து இந்தியா அணி இரண்டாம் இடத்தில் உள்ளது. ஏன் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த தொடரை கைப்பற்றும் என்று நான் கூறுகிறேன் என்றால் வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஏராளமான மேட்ச் வின்னர்கள் மற்றும் பவர் ஹிட்டர்கள் ஆகியோர் அணியில் உள்ளனர். இளமையும் அனுபவம் கலந்த நல்ல சமபலத்துடன் ஆன அணியாக வெஸ்ட் இண்டீஸ் அணி திகழ்வதால் நிச்சயம் அந்த கோப்பையை வெல்வதற்கு தகுதியான அணியாக உள்ளது.

அதுமட்டுமின்றி டி20 கிரிக்கெட்டில் மிக அனுபவம் வாய்ந்த அதிரடி வீரரான பொல்லார்ட் அந்த அணியை வழிநடத்துவது மற்றும் ஆன்ட்ரே ரசல், பிராவோ, கெயில் போன்ற மேட்ச் வின்னர்கள் பலர் அங்கு இருப்பதனாலும் அந்த அணி நிச்சயம் உலக கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளதாக கூறினார். மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணியை தொடர்ந்து இந்திய அணிக்கும் இந்த டி20 தொடரை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement