அவரை மாதிரி ஒரு வீரர். மும்பை இந்தியன்ஸ்க்கு கிடைச்ச லக்குன்னு தான் சொல்லனும் – சபா கரீம் பேட்டி

Karim
- Advertisement -

இந்தியாவில் துவங்கிய 14வது ஐபிஎல் தொடரானது கொரோனா பாதிப்பு காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு தற்போது இந்த தொடரின் எஞ்சியுள்ள 31 போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளை செப்டம்பர் 19ஆம் தேதி முதல் துவங்க உள்ளது. நாளைய முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இந்நிலையில் இந்த தொடர் குறித்தும். நாளைய போட்டி குறித்தும் பல்வேறு கருத்துகளை பல்வேறு முன்னாள் வீரர்களும், நிபுணர்கள், ரசிகர்கள், விமர்சகர்கள் என பலரும் அளித்து வருகின்றனர்.

CSKvsMI

- Advertisement -

அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரும், தேர்வுக் குழு உறுப்பினருமான சபா கரிம் மும்பை இந்தியன்ஸ் அணி குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சூர்யகுமார் யாதவ் போன்ற ஒரு பேட்ஸ்மேன் கிடைத்தது அவர்களுக்கு கிடைத்த லக் என்றே கூறலாம். ஏனெனில் மூன்றாவது அல்லது நான்காவது வரிசையில் களமிறங்கும் சூர்யகுமார் யாதவ் களத்தில் நீண்ட நேரம் நின்று தொடர்ச்சியாக ரன்களை குவிப்பவர்.

அதுமட்டுமின்றி தேவைப்படும்போது பவுண்டரிகளை விளாசும் ஆற்றலும் உடையவர். மும்பை அணியின் பேட்டிங் வரிசையில் பலமே சூரியகுமார் என்றால் அது மிகை அல்ல. ஏனெனில் அவர் நிலையாக நின்று ரன்களை குவித்து வருகிறார். அதிலும் குறிப்பாக தற்போது இந்திய அணிக்கு அறிமுகமாகி மீண்டும் திரும்பி வந்துள்ளதால் அவருடைய தன்னம்பிக்கை தற்போது உச்சகட்டத்தில் இருக்கும்.

sky 2

எனவே நிச்சயம் மும்பை அணி இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும். இஷான் கிஷனை பொறுத்த வரை அவர் துவக்க வீரராக விளையாட வேண்டிய அவசியமில்லை. நான்காவது இடத்திலேயே அவர் சிறப்பாக விளையாடி வருகிறார். இருப்பினும் சூழ்நிலைக்கு ஏற்றார் போல் மாற்றம் இருந்தாலும் அதனை அவர் தகவமைத்துக் கொள்வார். என்னை பொருத்தவரை தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் ஆர்டர் மிகச் சிறப்பாக உள்ளது.

SKY

ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதியில் மும்பை அணி சிறப்பாக செயல்படும். அதுமட்டுமின்றி டி20 உலக கோப்பை அணிக்கு தேர்வான ரோஹித், பாண்டியா, சூரியகுமார் யாதவ், இஷான் கிஷன் ஆகியோர் மும்பை அணியில் உள்ளது மிகப்பெரிய பலம் என்று சபா கரீம் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement