அவங்க 2 பேருக்கும் இன்னும் டைம் குடுக்கனும். அதிகம் எதிர்பாத்தா நமக்கு தான் பிரச்சனை – சபா கரீம் பேட்டி

Karim
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு இறுதியில் டி20 உலகக்கோப்பை தொடரானது நடைபெற உள்ள வேளையில் தற்போது அதற்கு முன்னதாக ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசியக்கோப்பை தொடரானது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தேர்வு செய்யப்பட்டுள்ள பெரும்பாலான வீரர்கள் டி20 உலகக்கோப்பை தொடரில் இடம் பெறுவார்கள் என்பதனால் இந்த தொடரில் அனைத்து வீரர்களது ஆட்டமும் இவ்வாறு இருக்கிறது என்பதை தேர்வுக்கு உன்னிப்பாக கவனித்து வருகிறது.

Avesh Khan Virat Kohli KL rahul Chahal India

- Advertisement -

அந்த வகையில் நடைபெற்று முடிந்த பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகளுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி அடுத்த சுற்று தகுதி பெற்றுள்ள வேளையில் நிச்சயம் இம்முறையும் கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ள கே.எல் ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோரது ஆட்டமும் கவனிக்கப்படும் விடயமாக மாறியுள்ளது.

இதில் கே.எல் ராகுல் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டக் அவுட் ஆகியது மட்டுமின்றி ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியிலும் மிகவும் பொறுமையாக விளையாடினார். அதே வேளையில் விராட் கோலி 2 போட்டிகளிலுமே ஓரளவு சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தி இருக்கிறார் என்று கூற வேண்டும்.

Suryakumar Yadav

இந்நிலையில் ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அணிக்கு திரும்பியுள்ள கே.எல் ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோரிடம் இருந்து பெரிய அளவில் நாம் எதையும் எதிர்பார்க்கக் கூடாது என்றும் அவர்களுக்கு சற்று நேரம் கொடுக்க வேண்டும் எனவும் இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினரான சபா கரீம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

விராட் கோலி பேட்டிங் பார்ம் இழப்பிற்கு பிறகு தற்போது தான் ஓய்வில் இருந்து திரும்பி உள்ளார். நிச்சயம் அவர் டி20 உலக கோப்பைக்குள் தயாராகி விடுவார். ஆசியக்கோப்பை தொடரில் தற்போது நடைபெற்று வரும் போட்டிகளிலும் அவர் கணிசமாக ரன்களை குவித்து வருகிறார். நிச்சயம் டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக அவர் தயாராகி விடுவார். அந்த அளவிற்கு அவர் தரமான வீரர்.

இதையும் படிங்க : யுவ்ராஜ் சிங்கின் அந்த சாதனைக்காக தான் ஆடுனேன். ஆனா மிஸ் ஆயிடுச்சி – சூரியகுமார் யாதவ் வெளிப்படை

அதேபோன்று கே.எல் ராகுல் கடந்த ஓராண்டாகவே தொடர்ச்சியாக காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். காயத்திலிருந்து மீண்ட அவர் தற்போது பேட்டிங் ரிதத்தை பிடிக்க சற்று நேரம் எடுக்கும். அவருக்கும் கொஞ்சம் காலம் அவகாசம் கொடுத்தால் நிச்சயம் அவர்கள் இருவரும் பலமாக திரும்புவார்கள் என சபா கரீம் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement