இந்த ஐ.பி.எல் தொடரை அலறவிட்ட பேட்ஸ்மேன்னா அது இவர்தான். இந்திய இளம் வீரரை பாராட்டிய – சபா கரீம்

Karim
- Advertisement -

இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரானது கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்துகொண்டிருந்த நேரத்தில், தொடரில் பங்கேற்று இருந்த சில வீரர்களுக்கும், அணி நிர்வாக ஊழியர்களுக்கும் கொரானா தொற்று ஏற்பட்டதை அடுத்து நடப்பு ஐபிஎல் தொடரை காலவரையின்றி ஒத்திவைத்திருக்கிறது, இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ. மொத்தம் 60 போட்டிகள் நடக்க வேண்டும் என்றிருந்த இத்தொடரில் 29 போட்டிகள் மட்டுமே முடிந்துள்ளது. மீதமிருக்கும் 31 போட்டிகளை எங்கே? எப்போது நடத்துவது என்பதை பற்றி ஆலோசனைகள் நடைபெற்று வரும் இந்த சமயத்தில், வெளிநாட்டு வீரர்களை பத்திரமாக அவர்களின் நாட்டுக்கு அனுப்பும் ஏற்பாடுகளையும் செய்து தந்திருக்கிறது பிசிசிஐ.

IPL

- Advertisement -

இதற்கிடையில் இத்தொடரில் நடைபெற்று முடிந்துள்ள போட்டிகளில் வீரர்களின் செயல்பாடுகள் மற்றும் அவர்களின் திறமைகளை பற்றி பல்வேறு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தங்களது கருத்துக்களை தெரிவத்து வரும் சூழ்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான சபா கரிம் தற்போது இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர் குறித்து அளித்த பேட்டியில் ப்ரித்வி ஷாவை தாறுமாறாக புகழ்ந்து தள்ளியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : ப்ரித்வி ஷாவை பற்றி சொல்லியே ஆக வேண்டும். இந்த சீசனில் எனக்கு மிகவும் பிடித்த வீரர் என்றால் அது ப்ரித்வி ஷாதான். தவானுடன் இணைந்து அவர் விளையாடிய ஆட்டம் இந்த தொடரில் பல வெற்றிகளை டெல்லி அணி குவிக்க காரணமாக அமைந்துள்ளது எனக் கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : எல்லா போட்டிகளிலும் அவருடைய ஆட்டம் சிறப்பாக இருந்தது. ஒரு நிலையான பேஸ்மென்ட் எவ்வாறு ஆடுகிறாரோ அதேபோன்று தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வந்தார்.

shaw-2

ஒரு போட்டியில் கூட அவர் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. மேலும் அனைத்து போட்டிகளிலும் துவக்க ஓவர்களிலேயே பவுலர்களுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் தனது அதிரடியை வெளிப்படுத்தினார். சிறப்பான மனநிலை மற்றும் உடல் தகுதி ஆகியவை இருந்தால் மட்டுமே இதேபோன்ற ஆட்டத்தை விழி படுத்த முடியும் என அவர் ப்ரித்வி ஷாவை புகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

shaw

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரித்வி ஷா அதற்கடுத்து ஆஸ்திரேலிய தொடரில் சொதப்பியதன் காரணமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அணியிலிருந்து நீக்கப்பட்டார். அதனை தொடர்ந்து விரக்தியில் இருந்த அவர் விஜய் ஹசாரே கோப்பையில் சரமாரியாக ரன்களை அடித்து விளையாடியது மட்டுமின்றி இந்த ஐபிஎல் தொடரிலும் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement