4 ஆவது இடத்தில் யாருக்கு வாய்ப்பு? ரிஷப் பண்டுக்கா? திலக் வர்மாவுக்கா? – சபா கரீம் அளித்த பதில்

Saba Karim
- Advertisement -

சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்தித்த இந்திய கிரிக்கெட் அணியானது அடுத்ததாக தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெறவிருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேளையில் இன்று இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டியானது நடைபெறவுள்ளது.

4 ஆவது இடத்தில் யார் களமிறங்கணும்? : சபா கரீம் பதில்

இந்த ஒருநாள் தொடரில் கேப்டன் சுப்மன் கில், துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்கள் காயம் காரணமாக இடம்பெற முடியாமல் போனதால் பல்வேறு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்திய ஒருநாள் அணியை பொறுத்தவரை தொடர்ச்சியாக நான்காவது இடத்தில் களமிறங்கி சிறப்பாக விளையாடி வந்த ஷ்ரேயாஸ் ஐயர் இந்த தொடரில் காயம் காரணமாக விளையாடவில்லை.

- Advertisement -

அதன் காரணமாக அவருக்கு பதிலாக விளையாடப்போகும் வீரர் யார்? என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தற்போதைய இந்திய அணியில் சுப்மன் கில்லுக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் போட்டியில் இருக்கும் வேளையில் நான்காவது இடத்திற்கு ரிஷப் பண்ட் மற்றும் திலக் வர்மா ஆகிய இருவருக்கிடையே போட்டி நிலவுகிறது.

இதன் காரணமாக நான்காவது இடத்தில் களமிறங்கி விளையாடப்போவது யார்? என்பது குறித்த கேள்வி பலரது மத்தியிலும் எழுந்துள்ளது. இந்நிலையில் தற்போதைய இந்திய ஒருநாள் அணியை பொறுத்தவரை நான்காவது இடத்தில் களமிறங்க ரிஷப் பண்ட்டை விட திலக் வர்மாவிற்கு தான் அதிக வாய்ப்புள்ளதாக முன்னாள் இந்திய வீரர் சபா கரீம் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : திலக் வர்மாவை இந்திய டாப் ஆர்டரில் சேர்த்தால் நிச்சயம் பிளேயிங் லெவனில் சமநிலை ஏற்படும். ஏனெனில் ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் வலது கை, இடது கை வீரர்களாக களமிறங்கும் பட்சத்தில் மூன்றாவது இடத்தில் விராட் கோலி வலது கை வீரராகவும், நான்காவது இடத்தில் திலக் வர்மா இடது கை வீரராகவும் களமிறங்குவார்கள்.

இதையும் படிங்க : 2 வருஷமா ருதுராஜ் கெய்க்வாடுக்கு சேன்ஸ் கிடைக்காம போக இதுதான் காரணம் – கே.எல் ராகுல் பேட்டி

ரிஷப் பண்ட்டும் இடது கை வீரர் தான் என்றாலும் திலக் வர்மா ஒரு முழுநேர பேட்ஸ்மேன் என்பதால் அவரை டாப் ஆர்டரில் விளையாட வைக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் பார்க்கையில் ரிஷப் பண்ட்டை தாண்டி திலக் வர்மா ஒரு படி மேலே இருக்கிறார். எனவேதான் நான்காவது இடத்தில் திலக் வர்மா விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன் என சபா கரீம் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement