2 வருஷமா ருதுராஜ் கெய்க்வாடுக்கு சேன்ஸ் கிடைக்காம போக இதுதான் காரணம் – கே.எல் ராகுல் பேட்டி

KL Rahul and Ruturaj
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது இன்று நவம்பர் 30-ஆம் தேதி ராஞ்சி நகரில் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக இந்திய அணியின் வீரர்கள் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே டெஸ்ட் தொடரில் அடைந்த தோல்விக்கு பழி தீர்க்கும் விதமாக இந்த ஒருநாள் தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி தயாராகி வருகிறது.

ருதுராஜ் கெய்க்வாட் ஒரு டாப் கிளாஸ் பிளேயர் : கே.எல் ராகுல்

இந்த டெஸ்ட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்திய அணியின் நட்சத்திர துவக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் இடம் பிடித்துள்ளதால் அவர் இந்த போட்டியில் விளையாடுவாரா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

- Advertisement -

ஐபிஎல் போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் இந்திய அணிக்காக டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஏற்கனவே அறிமுகமாகி இருந்தாலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வருகிறார்.

இந்நிலையில் இந்திய அணியின் தற்போதைய தற்காலிக கேப்டனாக இருக்கும் கே.எல் ராகுல் ருதுராஜ் கெய்க்வாட் தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளதால் நிச்சயம் இந்த தென்னாப்பிரிக்க தொடரில் வாய்ப்பினை பெறுவார் என்று நம்பிக்கை அளிக்கும் வகையில் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : உண்மையிலேயே ருதுராஜ் ஒரு டாப் கிளாஸ் பிளேயர். அவர் எப்போதெல்லாம் தனக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறதோ அப்போதெல்லாம் தனது திறமையை நிரூபித்து இருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணியை பொறுத்தவரை அவர் மிகக் குறைந்த அளவிலான வாய்ப்புகளையே பெற்றிருந்தாலும் அதில் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளார். ஒருநாள் போட்டியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போக முக்கிய காரணமே இந்திய அணியில் டாப் 5 முதல் 6 வரை நிரந்தரமான வீரர்கள் இடம் பிடித்து விளையாடி வருகின்றனர். எனவே அந்த ஒரு காரணத்தினாலேயே அவர் இரண்டு ஆண்டுகளாக வாய்ப்பினை பெறாமல் இருந்து வருகிறார்.

இதையும் படிங்க : வாஷிங்டன் சுந்தர் இருக்காரு தான்.. ஆனாலும் ஒரு விஷயம் டெஸ்ட் டீமில் மிஸ்ஸிங் – ஹர்பஜன் சிங் கருத்து

இந்நிலையில் இந்த தென்னாப்பிரிக்க தொடரில் அவருக்கு கிடைத்த வாய்ப்பினை நிச்சயம் அவர் பயன்படுத்திக்கொள்வார் என்று நினைக்கிறேன். நாங்களும் அவருக்கு இந்த தொடரில் விளையாட வாய்ப்பை வழங்க காத்திருக்கிறோம் என்று கே.எல் ராகுல் கூறியுள்ளார். இதன் மூலம் நிச்சயம் யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு முன்னதாக ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement