பும்ரா குணமடையா விட்டால் டி20 உ.கோப்பையில் விளையாட அந்த 2 பேரும் தான் தகுதியானவர்கள்

Bumrah-1
Advertisement

வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை வெல்வதற்காக உலகின் அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. அந்த வகையில் கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் விராட் கோலி தலைமையில் லீக் சுற்றுடன் வெளியேறிய இந்தியா இம்முறை 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற அனுபவம் நிறைந்த ரோகித் சர்மா தலைமையில் களமிறங்க தீவிரமாக தயாராகி வருகிறது. அவரது தலைமையில் கடந்த டி20 உலகக்கோப்பைக்கு பின் பங்கேற்ற தொடர்களில் நிறைய இளம் வீரர்களுக்கு சுழற்சி முறையில் வாய்ப்பளித்து தரமான வீரர்களை கண்டறியும் வேலையும் நடைபெற்று வருகிறது.

IND vs ENG Rohit Sharma Yuzvendra Chahal

அந்த சோதனையில் இதுவரை எந்த தோல்வியும் சந்திக்காமல் தொடர்ச்சியாக இந்தியா வெற்றி நடை போட்டு வருவதால் ஏற்கனவே 80% உலகக்கோப்பை அணி உறுதி செய்யப்பட்டு விட்டதாக ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து வரும் ஆகஸ்ட் 27 முதல் துவங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆசிய கோப்பையிலிருந்து இறுதிகட்ட இந்திய அணி தேர்வு செய்யப்படவுள்ளது. அதனால் விமர்சனத்தை சந்தித்துள்ள விராட் கோலி, தினேஷ் கார்த்திக், அஷ்வின், ஜடேஜா போன்ற முக்கிய வீரர்கள் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

பும்ரா சந்தேகம்:
முன்னதாக இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திர முதன்மை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் கடைசி நேரத்தில் சந்தித்த காயத்தால் இந்த ஆசிய கோப்பையிலிருந்து விலகியுள்ளனர். இதில் பும்ரா இந்திய பந்துவீச்சு துறையின் முதுகெலும்பாக பார்க்கப்படும் நிலையில் ஹர்ஷல் படேல் போட்டியின் அனைத்து இடங்களிலும் சிறப்பாக பந்து வீசும் டி20 ஸ்பெஷலிஸ்ட் பவுலராக பார்க்கப்படுகிறார்.

ஆசிய கோப்பையிலிருந்து விலகியுள்ள இந்த 2 முக்கிய பவுலர்களும் அக்டோபரில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் விளையாடுவார்களா என்பது சந்தேகமாகியுள்ளது. தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் காயத்திலிருந்து குணமடைவதற்கான வேலைகளில் ஈடுபட்டு வரும் அவர்கள் உலக கோப்பைக்கு இன்னும் ஒரு மாதம் இருப்பதால் குணமடைந்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ஒருவேளை அவர்கள் விலகும் பட்சத்தில் ஆவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா போன்ற ரன்களை வாரி வழங்கும் இளம் பந்துவீச்சாளர்களை காட்டிலும் முகமது சமி மற்றும் தீபக் சஹர் போன்ற அனுபவமும் திறமையும் நல்ல பார்மில் இருப்பவர்களே உலக கோப்பையில் விளையாட தகுதியானவர்கள் என்று முன்னாள் இந்திய வீரர் சபா கரிம் தெரிவித்துள்ளார்.

Karim

சஹர் – ஷமி:
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஹாட்ரிக் மற்றும் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த இந்திய பவுலராக சாதனை படைத்துள்ள தீபக் சஹர் ஏற்கனவே டி20 உலகக்கோப்பையில் பும்ராவுடன் விளையாடுபவராக கருதப்பட்டார். ஆனால் துரதிஷ்டவசமாக ஐபிஎல் 2022 தொடருக்கு முன்பாக கடைசி நேரத்தில் சந்தித்த காயத்தால் 6 மாதங்கள் அணியிலிருந்து விலகியிருந்த அவர் நடைபெற்று வரும் ஜிம்பாப்வே தொடரில் களமிறங்கிய முதல் போட்டியிலேயே அபாரமாக பந்துவீசி ஆட்ட நாயகன் விருது பெற்று கம்பேக் கொடுத்துள்ளார்.

- Advertisement -

அதேபோல் கடந்த வருடம் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் முழுமையாக விளையாடிய முகமது ஷமிக்கு 30 வயதை கடந்து விட்டார் என்பதற்காக அதன்பின் எந்த ஒரு டி20 போட்டியிலும் விளையாடும் வாய்ப்பை கொடுக்காத தேர்வுக்குழு இளம் வீரர்கள் வந்து விட்டதால் இனிமேல் உங்களுக்கு வாய்ப்பு கிடையாது என்று வெளிப்படையாகவே கூறிவிட்டது.

Shami 1

இருப்பினும் ஐபிஎல் 2022 தொடரில் குஜராத் அணிக்காக அபாரமாக பந்துவீசிய அவர் 16 போட்டிகளில் 20 விக்கெட்களை எடுத்து முதல் கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றி நல்ல பார்மில் இருக்கிறார். எனவே பும்ராவுக்கு பதில் விளையாட இந்த இருவரும் தகுதியானவர்கள் என்று தெரிவிக்கும் சபா கரிம் சமீபத்திய பேட்டியில் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ஒருவேளை ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதில் ஒருவர் விளையாட வேண்டிய சூழ்நிலை வந்தால் அவர் சமீபத்திய டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்படுவதுடன் நல்ல அனுபவத்தையும் பெற்றிருக்க வேண்டும். அந்த வகையில் முகமது சமி மற்றும் தீபக் சஹர் ஆகியோர் அந்த இடத்தில் விளையாடும் தகுதியுடையவராக உள்ளனர்”

இதையும் படிங்க : எனது தந்தை இந்தியாவை தோற்கடித்தது போல் நானும் ஆசிய கோப்பையில் தோற்கடிப்பேன் – இளம் பாக்வீரர் நம்பிக்கை

“அவர்களிடம் புதிய பந்தில் விக்கெட்டுகளை எடுக்கும் திறமையும் உள்ளது. சமீபத்திய ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்ட முகமது சமி நல்ல ஃபார்மில் இருக்கிறார். எனவே டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக நடைபெறும் தொடர்களில் அவருக்கு தேர்வுக்குழு வாய்ப்பு கொடுத்தால் நிச்சயம் 11 பேர் கொண்ட அணியில் நேரடியாக இடம் பிடிக்கும் அளவுக்கு சிறப்பாக செயல்படுவார்” என்று கூறினார்.

Advertisement