- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ரோஹித்துக்கு பின் இந்தியாவின் டி20 கேப்டனாக அந்த 2 பேர் ரெடியா இருகாங்க.. சபா கரீம் வெளிப்படை

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா 20 ஓவர் போட்டிகளில் ஓய்வு பெற்றனர். அதில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் ஓய்வு பெற்றது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. ஏனெனில் கடந்த 10 வருடங்களாக சிறப்பாக செயல்பட்ட அவர்கள் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த டாப் 2 பேட்ஸ்மேன்களாக உலக சாதனை படைத்துள்ளனர்.

அந்தளவுக்கு சிறப்பாக விளையாடி வெற்றிகளில் பங்காற்றிய அவர்கள் தற்போது 35 வயதை கடந்து விட்டதால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு ஓய்வு முடிவை அறிவித்துள்ளனர். அதில் ரோஹித் சர்மா ஓய்வு பெற்றது நிச்சயமாக இந்திய அணிக்கு பெரிய பின்னடைவு என்றே சொல்லலாம். ஏனெனில் ஐசிசி தொடரில் சொந்த சாதனையை பார்க்காமல் எதிரணியை அடித்து நொறுக்க வேண்டும் என்ற அணுகுமுறையை அவர் இந்திய அணிக்குள் கொண்டு வந்துள்ளார்.

- Advertisement -

அடுத்த கேப்டன்:
அதைப் பின்பற்றியே இந்தியாவும் 17 வருடங்கள் கழித்து டி20 உலகக கோப்பை வென்றது. இருப்பினும் அவர் ஓய்வு பெற்றுள்ள நிலையில் இந்திய டி20 கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. இந்நிலையில் ரோஹித் சர்மாவின் இடத்தை நிரப்ப ஹர்திக் பாண்டியா மற்றும் சூரியகுமார் யாதவ் தயாராக உள்ளதாக சபா கரீம் கூறியுள்ளார்.

முன்னாள் இந்திய வீரர் மற்றும் தேர்வாளரான அவர் இது பற்றி சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “முதலில் டி20 அணியின் கேப்டன் யார் என்பதை முடிவு செய்ய வேண்டும். ஏனெனில் ரோகித் சர்மா ஓய்வு பெற்று விட்டார். எனவே நீங்கள் புதிய கேப்டனை நியமித்தாக வேண்டும். அதற்கு 2 பேர் தகுதியுடன் இருப்பதாக நான் கருதுகிறேன்”

- Advertisement -

“முதலில் டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருந்தார். எனவே அவர் அந்த இடத்திற்கு வர வேண்டும். கடந்த காலங்களில் அவர் இந்தியாவின் கேப்டனாக செயல்பட்டுள்ளார். அடுத்த 2 வருடங்களில் நடைபெறும் 2026 டி20 உலகக் கோப்பைக்கு தகுந்தாற்போல் நம்முடைய தயாரிப்பு இருக்க வேண்டும். அதே போல கடந்த வருடம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் சூரியகுமார் கேப்டனாக செயல்பட்டார்”

இதையும் படிங்க: 54.70 ஆவரேஜ் வெச்சுருக்கும் ரிங்குவுக்கு இந்த சான்ஸை கொடுத்தா அசத்திடுவாரு.. விக்ரம் ரத்தோர் கோரிக்கை

“இந்தியா வெற்றி கண்ட அந்தத் தொடரில் நன்றாக பேட்டிங் செய்த அவரும் வருங்காலத்தில் நல்ல தேர்வு. எனவே ஹர்திக் பாண்டியா வெற்றிக்கு முக்கிய பங்காற்றுபவராகவும் கேப்டனாகவும் செயல்படத் தகுதியானவர் என்று தேர்வாளர்கள் கருதினால் அவரைத் தேர்ந்தெடுக்கலாம். அந்த வகையில் உங்களுக்கு கேப்டனாக 2 வீரர்கள் தயாராக உள்ளனர்” என்று கூறினார்.

- Advertisement -