இந்திய அணிக்கு எதிரான இந்த தொடரின் எங்கள் இலக்கு இதுதான் – தெ.ஆ நிர்வாகம்

rsa

தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்திய அணிக்கு எதிராக சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் வரும் 15ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.

de kock

இந்நிலையில் அந்த அணியின் கேப்டன் டூப்ளிஸிஸ் இல்லாததால் அவருக்கு பதிலாக டிகாக் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி இந்தியா வந்தடைந்துள்ளது. இந்நிலையில் தென்ஆப்பிரிக்க அணியின் நிர்வாக இயக்குனர் இந்திய அணிக்கு எதிரான இந்த தொடர் குறித்து பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் குறிப்பிடுவது :

இந்திய தொடருக்கு எங்களிடம் சிறப்பான வீரர்கள் உள்ளனர். இந்த தொடரில் தென்ஆப்பிரிக்கா அணி சிறப்பாக செயல்படும். இந்தத் தொடருக்கு வந்துள்ள வீரர்களின் டிகாக் அனுபவம் வாய்ந்த வீரராக இருக்கிறார். அவருடன் பல இளம் வீரர்கள் இருப்பதால் இந்த தொடரில் நாங்கள் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு எதிரான இந்த கோப்பை கைப்பற்றுவது எங்களுடைய லட்சியம் என்று நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Saa

உலக கோப்பையில் தென் ஆப்பிரிக்க அணி படு தோல்வி அடைந்து வெளியேறியது. இதனைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா கடும் விமர்சனத்தை சந்தித்தது. அதன் பிறகு தற்போது ஒரு பெரிய தொடர் என்றால் அது இந்திய அணிக்கு எதிரான இந்தத் தொடர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.