2023 உ.கோ ஃபைனலில் ராகுல் செஞ்சதை மறக்காதீங்க.. அங்க தான் துருப்புச்சீட்டு பண்ட் வேணும்.. பத்ரிநாத் பேட்டி

Subramaniyam Badrinath
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட உள்ளது. அதற்கு முன்பாக இங்கிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா விளையாட உள்ளது. சொந்த மண்ணில் நடைபெறும் அந்தத் தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக கே.எல். ராகுல் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் பேக்-அப் கீப்பராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டைப் போல ஒருநாள் போட்டிகளில் இதுவரை தொடர்ச்சியாக அசத்தியதில்லை. மறுபுறம் 2023 உலகக் கோப்பையில் மிடில் ஆர்டரில் விளையாடிய ராகுல் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்நிலையில் ராகுலுக்கு பதில் ரிசப் பண்ட் தான் கீப்பராக விளையாட வேண்டும் என்று முன்னாள் வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

துருப்புச்சீட்டு முக்கியம்:

குறிப்பாக 2023 உலகக்கோப்பை ஃபைனலில் மிகவும் மெதுவாக விளையாடிய ராகுல் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தார். மறுபுறம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த மாதம் நடைபெற்ற சிட்னி டெஸ்ட் போட்டியில் 29 பந்துகளில் 50 ரன்கள் அடித்து நொறுக்கிய ரிஷப் பண்ட் குறைந்தபட்சம் வெற்றிக்கு போராடும் வாய்ப்பை இந்தியாவுக்கு கொடுத்தார். அந்த வகையில் ரிஷப் பண்ட் அழுத்தமான நேரத்தில் துருப்புச் சீட்டாக செயல்படும் தன்மையைக் கொண்டுள்ளதாக பத்ரிநாத் தெரிவித்துள்ளார்.

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “ரிஷப் பண்ட் – கேஎல் ராகுல் ஆகியோரைத் தேர்ந்தெடுப்பது 50க்கு 50 முடிவு போல் இருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஆம் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பிங் வேலையில் நன்றாக செயல்பட்டுள்ளார். அவர் நல்ல ஃபார்மில் இருக்கிறார். ஆனால் நான் துருப்புச்சீட்டு இருப்பதை விரும்புகிறேன்”

- Advertisement -

2023 உலகக் கோப்பை:

“நான் ரிஷப் பண்ட்டின் பெரிய ரசிகன். அவர் வருங்காலங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஃபார்மெட்டில் கேப்டனாக வருவார் என்று நினைக்கிறேன். அது எந்த ஃபார்மட் என்று எனக்குத் தெரியாது. கண்டிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டாக இருக்கலாம். அதே போல வெள்ளைப் பந்து கிரிக்கெட்டிலும் கேப்டனாக வரலாம். எனவே இடது கை பேட்ஸ்மேனாக இருக்கும் அவரால் துருப்புச்சீட்டாக இருப்பார்”

இதையும் படிங்க: 99 டூ 2.. ராக்கெட் வேகத்தில் டிராவிஸ் ஹெட்டுக்கு டஃப் கொடுக்கும் அபிஷேக்.. நூலிழையில் ஐசிசி முதலிடத்தில் வருண்

“அது தான் உங்களுக்குத் தேவை. அது தான் நடந்தது. அந்தத் துருப்புச்சீட்டு தான் உலகக் கோப்பை ஃபைனலில் இந்தியா தவற விட்டது” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இந்தியா – இங்கிலாந்து தொடர் பிப்ரவரி 6ஆம் தேதி துவங்குகிறது. நாக்பூரில் துவங்கும் அந்தத் தொடரில் வெற்றி பெற இரு அணிகளும் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement