3 ஆவது டி20 போட்டியிலாவது ஹர்ஷித் ராணா அறிமுகம் ஆவாரா? – துணைப்பயிற்சியாளர் பதில் என்ன?

Ryan
- Advertisement -

வங்கதேச அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் ஒரு சில முக்கிய வீரர்களுக்கு ஓய்வளித்துவிட்டு இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் அசத்திய பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த வகையில் இதுவரை நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ள வேளையில் இந்த தொடரில் இந்திய அணிக்காக 2 வீரர்களுக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டது.

ஹர்ஷித் ராணா இந்திய அணிக்காக அறிமுகம் ஆவாரா? :

அந்தவகையில் மிடில் ஆர்டரில் ஆல்ரவுண்டரான நிதீஷ் ரெட்டியும், வேகப்பந்து வீச்சாளரான மாயங்க் யாதவும் அறிமுகம் செய்யப்பட்டனர். ஆனால் அவர்களுடன் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்ட மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணாவிற்கு இதுவரை வாய்ப்பு வழங்கப்படவில்லை. கடந்த இரண்டு டி20 தொடர்களாகவே இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தாலும் அவருக்கு இதுவரை பிளேயிங் லெவனில் அறிமுக வாய்ப்பு கிடைக்கவில்லை.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணி தற்போது வங்கதேச அணிக்கு எதிரான தொடரை கைப்பற்றி விட்டதால் மூன்றாவது டி20 போட்டியிலாவது வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணாவிற்கு வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் இது குறித்த கேள்விக்கு பதிலளித்த இந்திய அணியின் துணை பயிற்சியாளர் கூறுகையில் :

தற்போதைய இந்திய அணியை பார்க்கும் போது பலமான ஒரு அணியாகவே இருந்து வருகிறது. நாங்கள் முடிந்தவரை நிறைய வீரர்களை அறிமுகப்படுத்த விரும்புகிறோம். ஆனாலும் அணியின் உள்ள சமநிலையை பொறுத்து அந்த செயல்பாடுகள் இருக்கும். தற்போதைய இந்திய அணியில் ஜிதேஷ் சர்மா, திலக் வர்மா போன்ற வீரர்கள் கூட இருக்கின்றனர். ஆனால் யார் சமநிலையை ஏற்படுத்துவார்களோ அவர்களை விளையாட வைக்க முயற்சி செய்து வருகிறோம்.

- Advertisement -

இன்னும் 18 மாதங்கள் கழித்து டி20 உலக கோப்பை தொடர்பானது நடைபெற இருக்கிறது. அதன் காரணமாக சில விஷயங்களை முயற்சி செய்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் நிச்சயம் ஹர்ஷித் ராணா இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்க வேண்டிய ஒரு வீரர்தான். அவருக்கு சரியான நேரத்தில் வாய்ப்பு வழங்கப்படும்.

இதையும் படிங்க : அவரை மாதிரி ஒரு பேட்ஸ்மேன் கிடைப்பது ரொம்ப கஷ்டம்.. அவரை ஆர்.சி.பி விடக்கூடாது – அஷ்வின் கருத்து

ஐபிஎல் தொடரில் நல்ல அனுபவம் பெற்ற பல வீரர்கள் நமது அணியில் தற்போது இடம் பிடித்துள்ளனர். நிச்சயம் சரியான நேரத்தில் அனைவருக்குமே நீல நிற உடையில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்று அவர் கூறியுள்ளார். இதன் மூலம் நாளைய போட்டியில் ஹர்ஷித் ராணாவிற்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்படும் என்றே தெரிகிறது.

Advertisement