- Advertisement -
இந்திய கிரிக்கெட்

கடந்த 18 மாசமா நாங்க அவரை பாத்துக்கிட்டே இருக்கோம்.. நிதீஷ் ரெட்டியின் பிளஸ் குறித்து பேசிய – துணை கோச் பேட்டி

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் மூன்றாவது போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் வேளையில் இந்த போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் துணை பயிற்சியாளரான ரயான் டென் டெஸ்கோகாத்தே அளித்துள்ள ஒரு பேட்டி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

நிதீஷ் ரெட்டி குறித்து பேசிய இந்திய துணை பயிற்சியாளர் :

ஏற்கனவே இந்த தொடரை இந்திய அணி இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றிய வேளையில் இன்றைய மூன்றாவது போட்டியில் நிதீஷ்குமார் ரெட்டிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்திய அணியை பொறுத்தவரை சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களாக வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷ் துபே மற்றும் மானவ் சுதர் ஆகியோர் இந்த தொடரில் பங்கேற்று விளையாடி உள்ளனர். அதேவேளையில் காயமடைந்து வெளியேறிய வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியாவிற்கு பதிலாக நிதீஷ் ரெட்டி மட்டும்தான் இடம் பிடித்துள்ளார்.

- Advertisement -

அவரும் இந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடி விட்டு இரண்டாவது போட்டியில் விளையாடாமல் தற்போது மூன்றாவது போட்டிக்கு திரும்பியுள்ளார். இவ்வேளையில் இந்திய அணியில் பௌலிங் ஆல்ரவுண்டர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். ஆனால் ஹார்டிக் பாண்டியாவை போன்ற ஒரு பேட்டிங் ஆல்ரவுண்டர் வேண்டும் என்றுதான் நிதீஷ் ரெட்டியை நாங்கள் இன்னும் அதிக ஆதரவு கொடுத்து உருவாக்கி வருவதாக துணை பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : ஹார்டிக் பாண்டியா ஒருநாள் அணியில் இருப்பது இந்திய அணிக்கு மிகப்பெரிய அளவில் பலத்தை சேர்க்கும். ஏனெனில் அவர் ஒரு வலிமையான பேட்ஸ்மேன். அதுமட்டுமின்றி நல்ல பினிஷர் அதோடு அவரால் பந்து வீச்சிலும் மிகச் சிறப்பாக கை கொடுக்க முடியும். அவரைப்போன்ற ஒரு வீரரின் இடத்திற்கு மாற்றுவீரரை தேர்வு செய்வது கடினம். ஆனால் தற்போது 18 மாதங்களாக நாங்கள் நிதீஷ் ரெட்டியை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அவரிடம் ஹார்டிக் பாண்டியாவை போன்று செயல்படும் திறன் தென்படுகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : 3 ஆவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் ஏற்பட்டுள்ள 3 மாற்றங்கள் – பிளேயிங் லெவன் இதோ

அவரால் பேட்டிங்கும் செய்ய முடிகிறது அதேபோன்று பந்து வீச்சிலும் சிறப்பாக கை கொடுக்க முடிகிறது. அதிலும் ஒருநாள் போட்டிகளில் அவரது உடற்தகுதி மிகச் சிறப்பாக இருப்பதனால் அவரால் நல்ல முறையில் விளையாட முடிகிறது. ஹார்திக் பாண்டியாவின் இடத்திற்கு சரியான மாற்றுவீராக நாங்கள் அவரைத்தான் பார்க்கிறோம். அவரும் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் அற்புதமாக விளையாடுவதாக நிதீஷ் ரெட்டியை பாராட்டி துணை பயிற்சியாளர் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -