- Advertisement -
இந்திய கிரிக்கெட்

துருவ் ஜுரேலின் இந்த குணம் உண்மையிலேயே எங்களை வியக்க வைக்கிறது – அசிஸ்டன்ட் கோச் பேட்டி

இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் காயம் காரணமாக ரிஷப் பண்ட் இடம்பெறாமல் போனார். அதனால் அவருக்கு பதிலாக மாற்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக துருவ் ஜூரேல் இந்த தொடரில் விளையாடி வருகிறார். ஏற்கனவே இங்கிலாந்து தொடரில் பண்ட் காயம் அடைந்த போதெல்லாம் துருவ் ஜுரேலே சப்ஸ்டியூட் கீப்பராக செயல்பட்டிருந்தார்.

துருவ் ஜுரேலின் இந்த குணம் சிறப்பானது : அசிஸ்டன்ட் கோச்

அந்தவகையில் தனக்கு இந்த தொடரில் கிடைத்த வாய்ப்பை அவர் மிகச்சிறப்பாக பயன்படுத்தி கொண்டார் என்றே கூறலாம். ஏனெனில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் தனது முதல் சதத்தை பதிவு செய்து 125 ரன்கள் குவித்திருந்தார். அதனைத்தொடர்ந்து இரண்டாவது போட்டியிலும் அதிரடியாக 44 ரன்களை விளாசியிருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் இந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக சிறப்பான பங்களிப்பை வழங்கி வருவது துருவ் ஜுரேல்தான் என்றும் அணி தான் தனக்கு முதலில் முக்கியம் என்று அவர் சுயநலமின்றி இந்திய அணியின் சூழ்நிலையை கணித்து விளையாடுவதும் பார்ப்பதற்கு வியப்பாக உள்ளதாக இந்திய அணியின் துணை பயிற்சியாளரான ரயான் டென் டெஸ்கோத்தே பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : நம் எல்லோருக்குமே துருவ் ஜுரேல் எவ்வளவு ஒரு சிறப்பான வீரர் என்பது தெரியும். முதல் டெஸ்ட் போட்டியிலேயே அவர் 100 ரன்களை அடித்து அசத்தியிருந்தார். அதன்பின்னர் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் டிக்ளரை நோக்கி செல்லப்போகிறோம் என்று தெரிவித்ததுமே அதிரடியாக விளையாடி 44 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

இப்படி போட்டிக்கு என்ன தேவையோ அதை செய்யும் பக்குவத்துடன் டீம் தான் முதலில் முக்கியம் என்பதை உணர்ந்து கொண்டு அவர் சுயநலமின்றி விளையாடுவது மிகச் சிறப்பான ஒன்று. அவருடைய பங்களிப்பு எங்களை வியக்க வைக்கிறது. அதனால் தான் ரிஷப் பண்டுக்கு அடுத்த முதன்மை விக்கெட் கீப்பராக டெஸ்ட் அணியில் இடம்பிடித்து வருகிறார்.

இதையும் படிங்க : கொஞ்சமா வாய்ப்பு கிடைச்சாலும் இந்த விடயத்தில் குல்தீப் யாதவ் அசத்துராரு – அனில் கும்ப்ளே பாராட்டு

டெஸ்ட் போட்டிகளை பொருத்தவரை மிகச் சிறப்பாக விக்கெட் கீப்பிங் செய்யும் அவர் பேட்டிங்கிலும் தொடர்ந்து நிலையான ரன் குவிப்பை வழங்கி வருகிறார். சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் அவர் விளையாடிய விதம் அற்புதமாக இருந்ததாகவும் ரயான் டென் டெஸ்கோத்தே கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -