- Advertisement -
இந்திய கிரிக்கெட்

கண்டிப்பா அவங்க மீண்டும் இதை செய்து பார்முக்கு வருவாங்க.. கேப்டன் மற்றும் து.கேப்டனுக்கு – அசிஸ்டன்ட் கோச் ஆதரவு

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் இந்திய அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்திருந்தது. இந்த தோல்விக்கு காரணம் டாப் ஆர்டரில் விளையாடிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது தான் என்று பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. அந்த அளவிற்கு இந்த மோசமான தோல்வி அனைவரது மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கேப்டன் மற்றும் துணை கேப்டனுக்கு ஆதரவாக பேசிய : அசிஸ்டன்ட் கோச்

அதிலும் குறிப்பாக இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மன் கில் ரன்கள் எதுவும் எடுக்காமலும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் 5 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை தொடரானது இன்னும் ஒரு மாத இடைவெளியில் ஆரம்பிக்கும் வேளையில் இப்படி கேப்டன் மற்றும் துணை கேப்டன் ஆகியோரது மோசமான ஆட்டம் பலரது மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் அவர்கள் இருவரின் மீது பெரியளவில் விமர்சனம் இருந்தாலும் இந்திய அணி நிச்சயம் அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் என துணை பயிற்சியாளரான ரயான் டென் டெஸ்கோத்தே தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : உண்மையிலேயே சுப்மன் கில்லிடம் இருக்கும் பேட்டிங் ஃபார்மில் சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

ஆஸ்திரேலிய தொடரின் பிற்பாதியில் அவர் செய்த மாற்றங்களை நாங்கள் நேரில் பார்த்தோம். நிச்சயம் அவர் டி20 போட்டிகளுக்கு ஏற்றவாறு மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். இந்த தொடரின் இரண்டு போட்டிகளில் அவர் விரைவாக ஆட்டமிழந்தாலும் இனிவரும் போட்டிகளில் பவர்பிளேவில் அட்டாக் செய்து விளையாடுவார்.

- Advertisement -

அதேபோன்று சூரியகுமார் யாதவ் விடயத்திலும் நாங்கள் கூறுவது ஒன்றுதான். தரமான வீரர்களுக்கு அவர்களுக்கு தேவையான நேரத்தை கொடுத்தால் நிச்சயம் அவர்கள் ரன்களை அடித்து பார்மிற்கு திரும்புவார்கள். இதையெல்லாம் புரிந்துகொண்டு வெளியில் இருந்து நீங்களும் ஆதரவு தரவேண்டும். அணியின் நிர்வாகம் அவர்களுக்கு நம்பிக்கை அளிப்பது போல வெளியில் இருந்து நம்பிக்கை கிடைத்தால் நிச்சயம் அவர்களால் சிறப்பாக செயல்பட முடியும் என அசிஸ்டன்ட் கோச் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : 14 போட்டிகளில் இதுவே முதல்முறை.. பும்ரா மற்றும் அர்ஷ்தீப் இருந்தும் இந்திய அணிக்கு நேர்ந்த சோகம் – விவரம் இதோ

கேப்டன் மற்றும் துணை கேப்டன் என இருவருமே இந்த தொடரின் இரண்டு போட்டிகளில் 21 ரன்கள் மட்டுமே குவித்துள்ளது ஏமாற்றத்தை அளித்தாலும் நிச்சயம் அவர்கள் மீண்டும் விரைவாக பார்முக்கு திரும்புவார்கள் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -