14 போட்டிகளில் இதுவே முதல்முறை.. பும்ரா மற்றும் அர்ஷ்தீப் இருந்தும் இந்திய அணிக்கு நேர்ந்த சோகம் – விவரம் இதோ

Bumrah and Arshdeep
- Advertisement -

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நேற்று முள்ளான்பூர் நகரில் நடைபெற்ற இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 51 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணியிடம் தோல்வியை சந்தித்தது. முதல் போட்டியில் 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்று இந்த தொடரில் இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் முன்னிலை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பும்ரா மற்றும் அர்ஷ்தீப் இருந்தும் இந்திய அணிக்கு நேர்ந்த பரிதாபம் :

ஆனால் நேற்று முள்ளான்பூர் நகரில் நடைபெற்ற இந்த இரண்டாவது டி20 போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென்னாப்பிரிக்க அணியானது முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பழி தீர்க்கும் வகையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை வீழ்த்தி இந்த தொடரினை ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்களை குவித்தது. பின்னர் 214 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 162 ரன்களுக்கு சுருண்டது.

அதனால் 51 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது வருண் சக்கரவர்த்தியை தவிர்த்து மற்ற இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் அனைவரையும் வெளுத்து வாங்கிய தென்னாப்பிரிக்க வீரர்கள் மிகச் சிறப்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். அதிலும் குறிப்பாக நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்களான பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஓவரிலும் அவர்களது அதிரடி மிக அருமையாக இருந்தது.

- Advertisement -

இந்த போட்டியில் அர்ஷ்தீப் சிங் வீசிய 4 ஓவர்களில் 54 ரன்களையும், ஜஸ்ப்ரீத் பும்ரா வீசிய 4 ஓவர்களில் 45 ரன்களையும் விட்டுக்கொடுத்து இருந்தனர். இப்படி நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்களான இவர்கள் இருவரும் பிளேயிங் லெவனில் இருந்தும் இந்திய அணி தோல்வியை சந்தித்தது டி20 போட்டிகளில் இதுவே முதல் முறை.

இதையும் படிங்க : அவரோட ஸ்பெஷல் நாக் தான் இந்திய அணியை இப்படி வீழ்த்த காரணம் – எய்டன் மார்க்ரம் மகிழ்ச்சி

இதற்கு முன்னதாக டி20 போட்டிகளில் இவர்கள் இருவரும் இணைந்து விளையாடிய 13 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. இவ்வேளையில் முதன் முறையாக பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் இருந்தும் இந்திய அணி டி20 போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement