
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 47-வது லீக் ஆட்டத்தில் விளையாடியிருந்த மும்பை இந்தியன்ஸ் அணியானது அந்த அணியை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த தொடரில் தங்களது மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது. அதன்மூலம் புள்ளி பட்டியலில் 9 ஆவது இடத்தில் நீடிக்கிறது.
அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்களை குவித்தது. பின்னர் 229 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக ரோகித் சர்மா 84 ரன்களையும், ரயான் ரிக்கல்டன் 83 ரன்களையும் குவித்து அசத்தினர். அதிலும் குறிப்பாக துவக்க வீரராக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிக்கல்டன் 32 பந்துகளை சந்தித்து 6 பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர் என 259 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 83 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார்.
இந்நிலையில் அவர் இந்த போட்டியில் அடித்த 8 சிக்ஸர்களின் மூலம் முன்னாள் மும்பை அணியின் ஜாம்பவானான கைரன் பொல்லார்டின் ஒரு மாபெரும் சாதனை ஒன்றினையும் முறையடித்துள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : மும்பை அணிக்காக இதுவரை மூன்று முறை ஒரு போட்டியில் 8 மற்றும் அதற்கு மேற்பட்ட சிக்சர்களை கைரன் பொல்லார்டு அடித்துள்ளார்.
இதையும் படிங்க : 84 ரன்கள் அடித்ததோடு மட்டுமின்றி தனிப்பட்ட முறையிலும் முக்கிய சாதனையை நிகழ்த்திய – ரோஹித் சர்மா
இவ்வேளையில் நேற்றைய போட்டியில் ரயான் ரிக்கல்டன் 8 சிக்ஸர்களை அடித்ததன் மூலம் அவரும் கைரன் பொல்லார்டுடன் இந்த பட்டியலில் இணைந்துள்ளார். அதாவது மும்பை அணிக்காக அவர் ஐபிஎல் போட்டிகளில் மூன்று முறை 8 அல்லது அதற்கு மேற்பட்ட சிக்ஸர்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.