- Advertisement -
இந்திய கிரிக்கெட்

கருண் நாயரின் மறுவாய்ப்பு முடிந்ததா? 4வது போட்டியில் சுதர்சன் விளையாடுவாரா? கோச் ரியான் பதில்

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. 3 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் இருக்கும் அத்தொடரின் 4வது போட்டி ஜூலை 23ஆம் தேதி மான்செஸ்டரில் துவங்குகிறது. அப்போட்டியில் கருண் நாயர் நீக்கப்பட வேண்டும் என்று சிலர் கருதுகிறார்கள்.

2016 இங்கிலாந்து தொடரில் அறிமுகமான கருண் நாயர் சென்னையில் சேவாக்கிற்கு பின் இந்தியாவுக்காக முச்சதத்தை அடித்து சாதனை படைத்தார். ஆனால் அதன் பின் பெரிய ரன்களை எடுக்காத அவரை இந்திய அணி கழற்றி விட்டது. இருப்பினும் மனம் தளராமல் உள்ளூர் மற்றும் கவுண்டி தொடரில் போராடிய அவர் பெரிய ரன்கள் குவித்ததால் 8 வருடம் கழித்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

- Advertisement -

மறுவாய்ப்பு போதுமா:

அந்த வாய்ப்பில் இங்கிலாந்து லயன்ஸ்க்கு எதிராக இரட்டை சதத்தை அடித்த அவர் முதல் போட்டியில் மிடில் ஆர்டரில் விளையாடி பெரிய ரன்கள் எடுக்கவில்லை. அதனால் சாய் சுதர்சனை அறிமுகப் போட்டியுடன் கழற்றி விட்ட இந்திய அணி கருண் நாயரை 3வது இடத்தில் விளையாட வைத்தது. அந்த வாய்ப்பிலும் அரை சதம் கூட அடிக்காத அவர் ஏமாற்றத்தையே கொடுத்தார்.

குறிப்பாக 3வது போட்டியில் பந்தை தவறாக படித்த அவர் விக்கெட்டை இழந்தது இந்தியாவின் தோல்விக்கு வித்திட்டது. எனவே வருங்காலத்தைக் கருத்தில் கொண்டு அவரை கழற்றி விட்டு சாய் சுதர்சனுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று தீப்தாஸ் குப்தா போன்ற முன்னாள் வீரர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்கள். இந்நிலையில் கருண் நாயர் பெரிய ஸ்கோர் அடிக்காவிட்டாலும் மோசமான ஃபார்மில் இருப்பது போல் விளையாடவில்லை என்று துணைப் பயிற்சியாளர் ரியான் டஸ்சேட் கூறியுள்ளார்.

- Advertisement -

இன்னும் முடியல:

எனவே நாயரின் மறு வாய்ப்பு இன்னும் முடியவில்லை என்று மறைமுகமாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “2 – 1 என பின்னிலையில் இருக்கும் போது இது போன்ற கேள்விகள் வரும். ஆனால் தொடரின் பெரும்பாலான பகுதிகளில் எங்களுடைய பேட்ஸ்மேன்கள் நன்றாக விளையாடியதாகவே நாங்கள் கருதுகிறோம். குறைந்த இடைவெளியில் நிறைய விக்கெட்டுகள் இழந்ததே 2 தோல்விகளுக்கு காரணம்”

இதையும் படிங்க: இந்தியாவுக்காக முடியலன்னா போய்டுங்க.. ஏத்துக்க முடியாததை செய்யாதீங்க.. பும்ரா, கம்பீரை சாடிய வெங்சர்கார்

“அந்த 2 போட்டிகளிலும் சுமார் 40 ரன்களுக்கு நாங்கள் 6 விக்கெட்டுகளை இழந்ததே தோல்விக்குக் காரணமானதாக கருதினோம். மற்ற படி எங்களுடைய பேட்ஸ்மேன்கள் அனைவருமே நன்றாக ரன்கள் அடித்தார்கள். கருண் நல்ல ஃபார்மில், ரிதத்தில் விளையாடினார். அவரிடம் நாங்கள் அதிக ரன்களை விரும்பினோம். ஆனால் தற்சமயத்தில் நன்றாக செய்ததில் கவனம் செலுத்தி வெற்றிக்குத் தேவையான சிறிய விஷயங்களை ஒழுங்கமைக்க வேண்டும் என்பதே எங்களுடைய இலக்காகும்” எனக் கூறினார்.

- Advertisement -