116 ரன்ஸ்.. என்ன மனசுங்க.. அடுத்தடுத்த ஆட்டநாயகனான ருதுராஜ்.. பிரிதிவியிடம் செய்த நெகிழ்ச்சி செயல்

Ruturaj Gaikwad
- Advertisement -

ரஞ்சிக் கோப்பையின் 2025 – 26 சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. அதில் சண்டிகரில் அக்டோபர் 25ஆம் தேதி எலைட் குரூப் பி பிரிவில் இடம் வகிக்கும் சண்டிகர் மற்றும் மகாராஷ்டிரா மோதிய போட்டித் துவங்கியது. அப்போட்டியில் டாஸ் அதிர்ஷ்டத்தை வென்ற சண்டிகர் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய மகாராஷ்டிரா 313 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் ருதுராஜ் கெய்க்வாட் சதத்தை அடித்து 15 பவுண்டரியுடன் 116 ரன்கள் குவித்தார். அவருடன் சௌரப் நவாலே 66, அர்சின் குல்கர்னி 50 ரன்கள் அடித்தனர். சண்டிகருக்கு அதிகபட்சமாக ஜக்ஜித் சிங், அபிஷேக் சைனி தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

- Advertisement -

ருதுராஜ் அசத்தல்:

அடுத்து விளையாடிய சண்டிகரை சிறப்பாக பந்து வீசிய மகாராஷ்டிரா 209 ரன்களுக்கு சுருட்டி 104 ரன்கள் முன்னிலை பெற்றது. அதிகபட்சமாக ராமன் பிஸ்னோய் 54, நிசுங்க் பிர்லா 56* ரன்கள் எடுத்த நிலையில் மகாராஷ்டிராவுக்கு அதிகபட்சமாக விக்கி ஓஸ்ட்வால் 6 விக்கெட்டுகள் எடுத்தார். அடுத்ததாக விளையாடிய மகாராஷ்டிரா தங்களுடைய 2வது இன்னிங்ஸில் 359/3 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

அதிகபட்சமாக சண்டிகர் பவுலர்களை டி20 போல அடித்து நொறுக்கிய பிரிதிவி ஷா 29 பௌண்டரி 5 சிக்சருடன் 222 (156) ரன்கள் குவித்து அசத்தினார். குறிப்பாக 141 பந்துகளில் ரஞ்சிக்கோப்பை வரலாற்றில் 3வது வேகமான இரட்டை சதத்தை அடித்த வீரராகவும் அவர் சாதனை படைத்தார். அவருடன் சித்தேஷ் வீர் 62, ருதுராஜ் கெய்க்வாட் 36* (35), அர்சின் குல்கர்ணி 31 ரன்கள் எடுத்தார்கள்.

- Advertisement -

நெகிழ்ச்சியான செயல்:

இறுதியில் 454 ரன்கள் இலக்கைத் துரத்திய சண்டிகர் முடிந்தளவு போராடியும் 319 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது. அதிகபட்சமாக அர்ஜுன் அசாத் சதத்தை அடித்து 168 ரன்கள் எடுத்த நிலையில் மகாராஷ்டிராவுக்கு அதிகபட்சமாக முகேஷ் சவுத்ரி, ராமகிருஷ்ணா கோஸ் தலா 4 விக்கெட்டுகள் எடுத்தனர். அதனால் 144 ரன்கள் வித்தியாசத்தில் மகாராஷ்டிரா அபார வெற்றி பெற்றது.:

அதற்கு முக்கிய பங்காற்றிய ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். கேரளாவுக்கு எதிரான கடந்தப் போட்டியில் அவர் 146 ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருதை வென்றார். தற்போது இதையும் சேர்த்து அவர் அடுத்த ஆட்டநாயகன் விருதுகளை வென்றார்.

இதையும் படிங்க: ரோஹித் சர்மா இந்த தொடருக்கு பின்னர் தான் ஓய்வை அறிவிப்பார் – சிறுவயது பயிற்சியாளர் பேட்டி

இருப்பினும் இப்போட்டியில் மும்பை கிரிக்கெட் அணியிலிருந்து வெளியேறி மகாராஷ்டிராவுக்காக முதல் முறையாக விளையாடும் பிரிதிவி ஷா இரட்டை சதத்தை அடித்து அவரை விட அதிக ரன்கள் குவித்தார். எனவே கிரிக்கெட்டில் மீண்டும் கம்பேக் கொடுக்க போராடும் அவருக்கு உத்வேகத்தை கொடுக்கும் வகையில் ருதுராஜ் கெய்க்வாட் தம்முடைய ஆட்டநாயகன் விருதை அவருடன் பகிர்ந்து கொண்டார். அதைப் பார்க்கும் சிஎஸ்கே ரசிகர்கள் என்ன மனசுயா என்று ருதுராஜின் நெகிழ்ச்சியான செயலைப் பாராட்டி வருகின்றனர்.

Advertisement