எட்ட முடியாத இலக்கு என்பது எதுவுமில்லை.. சி.எஸ்.கே ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்த – ருதுராஜ் கெய்க்வாட்

Ruturaj Gaikwad
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது ஆண்டுதோறும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் வேளையில் இந்த 2026-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் சீசனானது வரும் மார்ச் மாதம் இறுதியில் துவங்குகிறது. நடப்பு 2026 டி20 உலக கோப்பை தொடர் முடிந்த கையோடு இந்த தொடரானது நடைபெற உள்ளதால் அடுத்த இரண்டு மாதங்களுக்கு நல்ல பொழுதுபோக்கு காத்திருக்கிறது.

எதிர்வரும் 2026 ஐ.பி.எல் தொடர் குறித்து பேசிய : ருதுராஜ் கெய்க்வாட்

இந்த ஐபிஎல் தொடருக்காக தற்போது அனைத்து அணிகளும் தங்களது அணியின் வீரர்களை ஒன்றிணைத்து பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகமும் நாவலூரில் உள்ள தங்களது பயிற்சி மையத்தில் வீரர்களை முன்கூட்டியே ஒன்றிணைத்து வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடருக்கான சிஎஸ்கே அணியின் புதிய ஜெர்சி அறிமுக விழா நேற்று நடைபெற்றது. அந்த விழாவில் சி.எஸ்.கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் இளம் துவக்க வீரரான ஆயுஷ் மாத்ரே ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் அந்த நிகழ்ச்சியின் போது 2026 ஐ.பி.எல் டைட்டில் தான் தனது இலக்கு என சி.எஸ்.கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : எட்ட முடியாத இலக்கு என்பது எதுவும் இல்லை. எதிர்வரும் 2026 ஐ.பி.எல் சீசனில் ஆறாவது டைட்டில் சிஎஸ்கே அணிக்கு தான் வரும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : 100 வருடங்களுக்கு ஒருத்தர் தான் இந்த மாதிரி வரமுடியும்.. பும்ராவை பாராட்டிய – இர்பான் மற்றும் கவாஸ்கர்

ஏற்கனவே கடந்த ஆண்டு நடைபெற்ற 2025 ஐபிஎல் தொடரில் கடைசி இடத்தை பிடித்து வெளியேறிய சிஎஸ்கே அணியின் மீது விமர்சனங்கள் இருந்து வரும் வேளையில் பல்வேறு இளம் வீரர்களை அணிக்குள் வாங்கி சிஎஸ்கே அணியை பலப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement