3 ஆண்டுகளுக்கு முன்னர் சஞ்சு சாம்சன் தன்னிடம் சொன்ன தகவலை பகிர்ந்த ருதுராஜ் கெய்க்வாட் – விவரம் இதோ

Ruturaj and Samson
- Advertisement -

கடந்த பல ஆண்டுகளாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த சஞ்சு சாம்சன் 2025 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கு பின்னர் அந்த அணியில் இருந்து விலகுவதாக முடிவு செய்தார். அதனை தொடர்ந்து அவரை எப்படியாவது டிரேடிங் முறையில் கொண்டுவர வேண்டும் என்று பல்வேறு அணிகளும் முயற்சி செய்த வேளையில் இறுதியாக சிஎஸ்கே அணி ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரன் ஆகியோரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வழங்கி சஞ்சு சாம்சனை அதிகாரப்பூர்வமாக டிரேடிங் செய்து சிஎஸ்கே அணிக்குள் கொண்டு வந்துள்ளது.

சஞ்சு சாம்சன் கூறிய விடயத்தை பகிர்ந்த : ருதுராஜ் கெய்க்வாட்

இதன் காரணமாக முதல் முறையாக சஞ்சு சாம்சன் சென்னை அணிக்காக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாட இருக்கிறார். ஏற்கனவே எம்.எஸ் தோனி இந்த ஆண்டுடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் அவரது இடத்தை நிரப்ப சஞ்சு சாம்சனை கொண்டு வந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் இந்த ஐபிஎல் தொடரிலும் பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மூன்று வருடத்திற்கு முன்னதாக சஞ்சு சாம்சன் தன்னிடம் கூறியதை சி.எஸ்.கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் நினைவுகூர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :

3 ஆண்டுகளுக்கு முன்பு சஞ்சு சாம்சன் என்னிடம் வந்து : மஹி பாய் எப்படி இருக்கிறார்? சிஎஸ்கே-வின் சூழல் எப்படி இருக்கிறது? நீங்கள் தான் அடுத்த கேப்டனாக இருப்பீர்களா? என்று கேட்டார். அதற்கு நான் அவரிடம் கேப்டன் பதவி பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால் சிஎஸ்கே அணியில் விளையாடுவதையும், அங்குள்ள சூழ்நிலையும், அங்குள்ள கலாச்சாரத்தையும் நான் மிகவும் நேசிக்கிறேன் என்று பதில் அளித்தேன். பின்னர் சஞ்சு சம்சன் என்னிடம் வந்து :

- Advertisement -

இதையும் படிங்க : டி20 போட்டிகளில் எல்லோரும் அதிரடியா ஆடுறாங்க.. ஆனா என்னோட பிளான் வேற – சாய் சுதர்சன் பேச்சு

நான் சி.எஸ்.கே அணிக்கு எப்போது விளையாட வாய்ப்பு கிடைத்தாலும் கண்டிப்பாக வருவேன். நான் அங்கு வந்தால் கேப்டனாக விளையாடாமல் உங்களது தலைமையின் கீழ் விளையாட விரும்புகிறேன். அது உங்கள் அணி. சிஎஸ்கே அணியில் ஒரு சாதாரண வீரராக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. எனக்கு எப்போது ஒரு வாய்ப்பு கிடைத்தாலும் நிச்சயமாக சிஎஸ்கே அணிக்கு வருவேன் என்று கூறியதாக ருதுராஜ் கெய்க்வாட் நினைவு கூர்ந்துள்ளார்.

Advertisement