திடீரென அஜின்க்யா ரஹானே சி.எஸ்.கே அணியின் துவக்க வீரராக மாற்றப்பட்டது ஏன்? – ருதுராஜ் கெய்க்வாட் கொடுத்த விளக்கம்

Rahane
- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசியாக நடைபெற்று முடிந்த நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 29-வது லீக் போட்டியின் போது மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து விளையாடிது. மும்பை வான்கடே மைதானத்தில் அவர்களை வீழ்த்துவது கடினம் என்று பலராலும் பார்க்கப்பட்ட வேளையில் இந்த போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.

இந்நிலையில் நடைபெற்று முடிந்த அந்த போட்டியின் போது ரஹானே துவக்க வீரராக களம் புகுந்து 8 பந்துகளில் 1 பவுண்டியுடன் 5 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்து வெளியேறினார். வழக்கமாக மூன்றாம் இடத்தில் களமிறங்கும் ரகானே மும்பை இந்தியன்ஸ் அணிக்குரான இந்த போட்டியில் துவக்க வீரராக களம் இறங்கியது ஏன்? என்ற கேள்வி எழுந்தது.

- Advertisement -

அதோடு மட்டுமின்றி அவரது இந்த முடிவு பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. அதோடு துவக்க வீரராக விளையாடிய அவர் மூன்றாவது இடத்தில் களமிறங்கி 40 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் என 69 ரன்கள் குவித்து அசத்தினார். இந்நிலையில் இப்படி தனது இடத்தை விட்டுக் கொடுத்து மூன்றாவது இடத்தில் களமிறங்க காரணம் என்ன? என்பது குறித்தும் ரகானே துவக்க வீரராக வருவதற்கான அவசியம் என்ன இருக்கிறது? என்பது குறித்த கேள்விகளுக்கும் சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பதிலளித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் : ரகானே பாய்க்கு ஏற்கனவே சிறிய அளவில் காயம் இருந்தது. அதன் காரணமாகவே அவர் ஓப்பனராக வந்தால் அவரால் நிச்சயம் பவர் பிளேவை பயன்படுத்தி ரன்களை அடிப்பது எளிதாக இருக்கும் என்ற முடிவாலே அவரை முன்கூட்டியே துவக்க வீரராக களமிறங்கினார். மேலும் என்னால் எந்த இடத்தில் விளையாடினாலும் ரன்களை அடிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

- Advertisement -

கேப்டனாக மேலும் எனக்கு பொறுப்பு இருப்பதினால் நிச்சயம் அதனை சமாளித்து விளையாட முடியும் என்று நம்பிக்கை இருந்ததாலே துவக்க ஆட்டக்காரராக ரஹானேவை களம் இறக்க முடிவு செய்தேன் என்று ருதுராஜ் கூறியுள்ளார். அவர் கூறியது போன்றே இந்த மும்பை அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற போட்டியின் போது ரகானேவிற்கு காயம் ஏற்பட்டதால் அவர் பேட்டிங் செய்ய களமிறங்கவில்லை.

இதையும் படிங்க : 549 ரன்ஸ்.. 81 பவுண்டரிஸ்.. ரசிகர்களை சிக்ஸர் மழையில் நனைத்த ஆர்சிபி – ஹைதெராபாத் போட்டி.. 3 புதிய உலக சாதனை

அவருக்கு பதிலாக டேரல் மிட்சலே மூன்றாவது வீரராக களமிறங்கினார். அதனால் இந்த போட்டியில் அவர் விளையாடுவாரா? மாட்டாரா? என்று சந்தேகம் இருந்த வேளையில் ஓரளவு பிட்டாக இருந்த ரஹானேவை அணியில் சேர்த்ததோடு மட்டுமின்றி அவருக்கு துவக்க வீரருக்கான வாய்ப்பையும் ருதுராஜ் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement