549 ரன்ஸ்.. 81 பவுண்டரிஸ்.. ரசிகர்களை சிக்ஸர் மழையில் நனைத்த ஆர்சிபி – ஹைதெராபாத் போட்டி.. 3 புதிய உலக சாதனை

RCB vs SRH
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 தொடரில் ஏப்ரல் 15ஆம் தேதி நடைபெற்ற 30வது லீக் போட்டியில் பெங்களூருவை 25 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் தோற்கடித்தது. பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் 20 ஓவரில் 287/3 ரன்கள் குவித்து அதிகபட்ச ஐபிஎல் ஸ்கோர் அடித்த அணி என்ற தங்களுடைய சொந்த சாதனையை உடைத்து புதிய வரலாறு படைத்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 102, ஹென்றிச் க்ளாஸென் 67 ரன்கள் எடுத்த நிலையில் பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக லாக்கி பெர்குசன் 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து 288 ரன்களை துரத்திய பெங்களூரு அணிக்கு நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 42, கேப்டன் டு பிளேஸிஸ் 62, தினேஷ் கார்த்திக் 83 ரன்கள் அடித்து போராடினார்கள்.

- Advertisement -

3 உலக சாதனை:
ஆனாலும் இதர வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்க தவறியதால் 20 ஓவரில் பெங்களூருவை 262/7 ரன்களுக்கு கட்டுப்படுத்தி வென்ற ஹைதராபாத் சார்பில் அதிகபட்சமாக கேப்டன் பட் கமின்ஸ் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதனால் நான்காவது வெற்றியை பதிவு செய்த ஹைதராபாத் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியது. மறுபுறம் 6வது தோல்வியை பதிவு செய்து பெங்களூரு பத்தாவது இடத்தை வலுவாக பிடித்தது.

முன்னதாக இப்போட்டியில் 287 ரன்களை அடித்த ஹைதராபாத் அதிகபட்ச ஐபிஎல் ஸ்கோர் குவித்த அணியாக சாதனை படைத்தது. அதே போல 262 ரன்கள் அடித்த பெங்களூரு ஐபிஎல் தொடரில் சேசிங்கில் அதிக ரன்கள் அடித்த அணி என்ற சாதனையை படைத்து தோல்வியை சந்தித்தது. அந்த வகையில் இரு அணிகளும் சேர்ந்து இப்போட்டியில் மொத்தம் 549 ரன்கள் அடித்தன.

- Advertisement -

இதன் வாயிலாக அதிக ரன்கள் குவிக்கப்பட்ட டி20 போட்டி என்ற உலக சாதனையை இப்போட்டி படைத்துள்ளது. அந்தப் பட்டியல்:
1. 549 ரன்கள் : ஹைதெராபாத் – பெங்களூரு, பெங்களூரு, 2024*
2. 523 ரன்கள் : ஹைதெராபாத் – மும்பை, ஹைதெராபாத், 2024
3. 517 ரன்கள் : வெஸ்ட் இண்டீஸ் – தென் ஆப்பிரிக்கா, சென்சூரியன், 2023

அது போக இப்போடியில் ஹைதெராபாத் 22, பெங்களூரு 16 என 2 அணிகளும் சேர்ந்து மொத்தம் 38 சிக்சர்கள் அடித்தனர். இதன் வாயிலாக அதிக சிக்ஸர்கள் அடிக்கப்பட்ட டி20 போட்டி என்ற உலக சாதனையை இப்போட்டி சமன் செய்தது. இதற்கு முன் இதே சீசனில் ஹைதெராபாத் – மும்பை அணிகள் மோதிய போட்டியிலும் 38 சிக்சர்கள் அடிக்கப்பட்டது.

இதையும் படிங்க: அவங்க’கிட்ட அட்வைஸ் கேட்டு.. நல்லா குளிச்சி சாப்பிட்டு ஆர்சிபி’யை நொறுக்குனேன்.. ஆட்டநாயகன் ஹெட் பேட்டி

அத்துடன் இந்த போட்டியில் 2 அணிகளும் சேர்ந்து 43 ஃபோர்ஸ் 38 சிக்ஸர்கள் என மொத்தமாக 81 பவுண்டரிகள் அடித்தன. இதன் வாயிலாக அதிக பவுண்டரிகள் அடிக்கப்பட்ட டி20 போட்டி என்ற உலக சாதனையையும் இப்போட்டி சமன் செய்துள்ளது. இதற்கு முன் 2023 சென்சூரியனில் வெஸ்ட் இண்டீஸ் – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய போட்டியிலும் 81 பவுண்டரிகள் அடிக்கப்பட்டுள்ளது.

Advertisement