சி.எஸ்.கே அணியில் முதலில் சில போட்டிகளில் எனக்கு வாய்ப்பு கிடைக்காததற்கு இதுவே காரணம் – ருதுராஜ் கெய்க்வாட் பேட்டி

Ruturaj

ஐபிஎல் தொடரின் 53 வது லீக் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்து வீச தீர்மானித்தார்.

Dhoni

அதன்படி முதலில் விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக இளம் வீரர் தீபக் ஹூடா 30 பந்துகளில் 4 சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரிகள் என 62 ரன்களையும், கேஎல் ராகுல் 29 ரன்களும் குவித்தனர். சென்னை அணி சார்பாக லுங்கி நெகிடி சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 39 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

பின்னர் 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 18.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 154 ரன்கள் அடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக துவக்க வீரர் கெய்க்வாட் 49 பந்துகளில் 6 பவுண்டரி ஒரு சிக்சர் என 62 ரன்களையும், டு பிளிசிஸ் 34 பந்துகளில் 48 ரன்களையும், அம்பத்தி ராயுடு 30 பந்துகளில் 30 ரன்களும் குவித்தனர். ஆட்டநாயகனாக ருத்ராஜ் கெய்க்வாட் தேர்வானார்.

இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய ஆட்டநாயகன் ருதுராஜ் கெய்க்வாட் கூறுகையில் : நான் டொமஸ்டிக் கிரிக்கெட்டில் அனைத்து வகையிலும் சிறப்பாக ரன்களை குவித்து வந்தேன். அதனால் என்னிடம் பெரிய அளவில் நம்பிக்கை இருந்தது. மேலும் மாநில அளவிலான அணியிலும் என்னால் சிறப்பாக விளையாட முடிந்தது. அதனால் என்னுடைய அணிக்காக நான் எப்போது விளையாடும் போதும் நிறைய ரன்களை அடித்து வெற்றி பெற வைக்க முடியும் என்ற நம்பிக்கையும் என்னுள் இருந்தது.

- Advertisement -

இன்னும் அதிரடியாக விளையாட வேண்டிய ஆசையும் என்னிடம் உள்ளது. அதனாலேயே இந்த தொடரில் சிஎஸ்கே அணிக்காக எனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். ஐ.பி.எல் தொடரின் பிராக்டீஸின் போது கோவிட் காரணமாக பாதிக்கப்பட்ட என்னால் பயிற்சியில் சிறப்பாக கலந்து கொள்ள முடியவில்லை.

ruturaj 1

இதன் காரணமாக முதலில் சில போட்டிகளை தவற விட்டேன். அது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. இருப்பினும் நிர்வாகம் மற்றும் அணி வீரர்கள் எனக்கு நம்பிக்கை அளித்தனர். முக்கியமான நேரத்தில் எனக்கு வாய்ப்பளித்த அணி நிர்வாத்திற்க்கு நன்றியை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.