CSK : இவரோட பவுலிங்க்கு எதிரா ஆடுறது ரொம்ப கஷ்டம். இனிமே அவருக்கு எதிரா நான் ஆட விரும்பல – ருதுராஜ் கெய்க்வாட் ஓபன்டாக்

Ruturaj-Gaikwad
- Advertisement -

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற 49-ஆவது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. ஐபி எல் வரலாற்றின் மிகப்பெரிய இரண்டு அணிகளாக பார்க்கப்படும் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டியில் வெற்றி பெறப்போவது யார்? என்பது குறித்த ஆவலும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருந்தது.

CSK vs MI

- Advertisement -

அதன்படி சனிக்கிழமை அன்று நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது மும்பை இந்தியன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 139 ரன்கள் குவித்தது.

பின்னர் 140 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சிஎஸ்கே அணியானது 17.4 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 140 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் போது பந்துவீச்சில் சென்னை அணி சார்பாக 4 ஓவர்கள் பந்துவீசி 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய மதீஷா பதிரானாவிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

Matheesha Pathirana

அதோடு அன்று அவர் பந்து வீசிய விதம் குறித்து கேப்டன் தோனி உட்பட பல்வேறு நட்சத்திரங்களும் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் சென்னை அணியின் துவக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் தற்போது பதிரானா குறித்து பாராட்டி பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

நான் மதீஷா பதிரானாவை வலைப்பயிற்சியின் போது ஒரு 10-12 பந்துகள் விளையாடி இருக்கிறேன். அப்போதே முடிவு செய்துவிட்டேன் இனிமேல் அவர் பந்தில் விளையாடக் கூடாது என்று. ஏனெனில் அந்த அளவிற்கு அவர் வீசும் பந்துகளை கணிப்பது கடினமாக இருக்கிறது. வித்தியாசமான ஆக்ஷனாக இருந்தாலும் அவர் லைன் மற்றும் லென்ந்தில் அற்புதமாக வீசுகிறார். அதோடு அவர் பந்துவீசும் போது பந்து எங்கு வருகிறது என்பதை முதலில் கணிக்க வேண்டும் அதுவே மிகவும் கஷ்டமாக இருக்கிறது.

இதையும் படிங்க :

நல்ல வேலை அவர் எங்களது அணியிலேயே விளையாடுகிறார். அவரை எதிர்த்து பேட்டிங் செய்வது எந்த ஒரு பேட்ஸ்மேனுக்குமே கடினம் என்று நினைக்கிறேன். அந்த அளவிற்கு அவரது பவுலிங் ஸ்டைல் மற்றும் துல்லியம் ஆகியவை மிகச் சிறப்பாக இருக்கிறது என ருதுராஜ் கெய்க்வாட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement